ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக அரசு நேர்மையாக நடந்துகொள்ளத் தவறிவிட்டதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெம் வீரமணி விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் போடவில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய பெ.சண்முகம், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டும் ஏன் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு அந்த அறிக்கையில் எந்தப் பதிலும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க…
— M.K.Stalin (@mkstalin) September 24, 2026
மேலும், இந்த வழக்கை முறையாக விசாரிக்க விடாமல் தடுத்து, காவல்துறைக்கு அழுத்தம் தந்தது யார் என்பது குறித்து ஸ்டாலின் தனது அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை என்று அவர் சாடினார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் விசாரணை முறையாக நடைபெறாததற்குப் பொறுப்பேற்று, ‘திமுக ஆட்சிக் காலத்தில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை, இதற்கு நான் பொறுப்பேற்கிறேன்’ என்று ஸ்டாலின் நேர்மையாகக் கூறியிருக்க வேண்டும் எனப் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.