தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (27 ஜூன் 2026, சனிக்கிழமை) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.13,370 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் ரூ.560 வரை அதிகரித்து, ரூ.1,06,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதே நேரத்தில், வெள்ளி விலை இன்று எவ்வித மாற்றமும் இன்றி அதே நிலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.245.00 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000.00 என்ற பழைய விலையிலேயே இன்றும் விற்பனையாகி வருகிறது. வார இறுதி நாளான இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது நகைப்பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.



![தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? தடாலடியாகக் குறைந்த விலை - இன்றைய அதிரடி நிலவரம்!] A close-up view of gold coins and silver bars placed on a scale.](https://hub.tamilnaduflashnews.com/wp-content/uploads/2026/07/gold-and-silver-rate-july-7-2026-300x174.jpg)

