இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்கள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), காலியாக உள்ள பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப சாரா பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான isro.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள்:

  • டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (Technical Assistant) – 5 பணியிடங்கள்

  • டெக்னீசியன் (Technician) – 13 பணியிடங்கள்

  • சமையலர் (Cook) – 1 பணியிடம்

  • ஃபயர்மேன் (Fireman) – 3 பணியிடங்கள்

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு (Skill Test) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வானது ஓஎம்ஆர் (OMR) முறையில் ஆஃப்லைனில் திருநெல்வேலி மற்றும் சென்னையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே தங்களது தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

திறனறித் தேர்வானது தகுதித் தேர்வாக மட்டுமே (GO/NO-GO basis) கருதப்படும். இறுதித் தேர்வுப் பட்டியல் முழுமையாக எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தயாரிக்கப்படும். ஃபயர்மேன் பணியிடத்திற்கு மட்டும் எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வைத் தொடர்ந்து, இரண்டு கட்ட உடற்தகுதித் தேர்வு (PET) மற்றும் விரிவான மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Cylinder Price Hike? - சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி! இன்றிலிருந்து மாறிய சிலிண்டர் விலை!

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக 750 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை எஸ்பிஐ இ-பேமெண்ட் (SBI e-Payment) இணைய முகப்பு வாயிலாக இன்டர்நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ (UPI) முறையில் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு குறித்த விரிவான தகவல்களுக்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள முழுமையான அறிவிப்பைப் பார்வையிடலாம்.