தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த 52 கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பேணுகின்ற வகையில், செல்போன் பயன்படுத்தத் தடை இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. கோயில்களின் ஆகம விதிகளையும். ஆன்மிகச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையைச் செயல்படுத்தும் விதமாக, கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காகச் சிறப்புக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காகத் கோயில் வளாகங்களிலேயே நவீனப் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் (Lockers) ஏற்படுத்தப்பட்டு, அங்கு பக்தர்கள் எவ்விதக் கட்டணமும், சிரமமுமின்றித் தங்கள் கைப்பேசிகளையும், மின்னணு சாதனங்களையும் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புனிதத் தலங்களின் ஆன்மிகத் தன்மையைக் காக்கவும், பக்தர்களின் வழிபாடு எவ்வித இடையூறுமின்றி அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அறநிலையத்துறையின் வழிகாட்டுதல்களின்படி இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்தத் தடைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.