ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடும் வகையில், முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, அடுத்த ஆண்டு தனது சொந்த செல்போன்களைச் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இது தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்பிள் (Apple) மற்றும் சாம்சங் (Samsung) ஆகிய நிறுவனங்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்ஸ்கள் இல்லாத புதிய அனுபவம்:
தற்போது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் மெசேஜ் அனுப்ப ஒரு செயலி, டாக்ஸி புக் செய்ய ஒரு செயலி எனப் பல தனித்தனி ஆப்ஸ்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், OpenAI அறிமுகம் செய்யவுள்ள இந்த போன்களில் இந்த நிலை முற்றிலும் மாறப்போகிறது. பல செயலிகளுக்குப் பதிலாக, வாய்ஸ் கமெண்ட் (Voice Command) மூலம் இயங்கும் ஒற்றை AI Agent மட்டுமே அனைத்துப் பணிகளையும் செய்து முடிக்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட உள்ளது.
ஒற்றை ஏஐ ஏஜென்ட் புரட்சி:
பயனர்கள் தங்களுக்குத் தேவையானதை வாய்மொழியாகக் கூறினாலே போதும், அந்த ஒற்றை ஏஐ ஏஜென்ட் அனைத்துத் தகவல்களையும் திரட்டி, தேவையான பணிகளைச் செவ்வனே செய்து முடிக்கும். இதன் மூலம் செயலிகளுக்கு இடையே மாறி மாறிச் செல்லும் சிரமம் குறையும். இந்த ‘ஏஐ-ஃபர்ஸ்ட்’ (AI-First) அணுகுமுறை ஸ்மார்ட்போன் பயன்பாட்டு முறையையே அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.





