“ஜில்லா கூட்டணியை வச்சி மாஸ் பிளான்!” போதைப்பொருள் ஒழிப்புக்காக சிஎம் விஜயிடம் கேரளா அமைச்சர் வைத்த கோரிக்கை!

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘ஆபரேஷன் டூஃபான்’ திட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயை இன்று சென்னையில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு இரு மாநிலங்களின் எல்லையோரப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த முக்கிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து, அதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக அம்மாநில அரசால் ‘ஆபரேஷன் டூஃபான்’ (Operation Toofan: The Narco Hunt) என்ற தீவிர தேடுதல் வேட்டைத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலமான தமிழகத்தின் முழு ஒத்துழைப்பைப் பெறுவதற்காகவே அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இந்தச் சென்னை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் விஜயை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சென்னிதலா, கேரளாவின் போதைப்பொருள் தடுப்புக்கான தூதராக நடிகர் மோகன்லால் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தூதராகத் தற்போதைய முதல்வர் விஜய் இருந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். இவர்கள் இருவருமே ஏற்கனவே ‘ஜில்லா’ என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தில் தந்தை-மகனாக ஒன்றாக இணைந்து நடித்துள்ளதை நினைவு கூர்ந்த அவர், போதைப்பொருள் ஒழிப்பில் இரு மாநிலங்களும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "அரிசி விலை விண்ணை முட்டுவது ஏன்?" – தமிழ்நாட்டில் திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்!

மேலும், சமீபத்தில் தமிழகத்தில் பதவியேற்றுள்ள முதல்வர் விஜயின் தலைமையிலான புதிய அரசையும், அவரது வெளிப்படையான நிர்வாகத் திறனையும் அமைச்சர் மனதாரப் பாராட்டினார். போதைப்பொருள் இல்லாத தென்னிந்தியாவை உருவாக்குவதற்காக இரு மாநில அரசுகளின் எல்லைக் காவல் துறையினர் மற்றும் உளவுத்துறையினர் இணைந்து செயல்பட உள்ள இந்த புதிய முயற்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.