Vetri Payanam: பெண்களைக் கவர விஜயின் அடுத்த மாஸ் சர்க்குலர்! ‘வெற்றிப் பயணம்’ கட்டணமில்லா பேருந்து சேவை அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, பெண் வாக்காளர்களை மேலும் கவரும் வகையில் மற்றொரு பிரம்மாண்ட சர்க்குலரை சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மாநிலம் முழுவதும் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணச் சலுகையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையை விடக் கூடுதலாக, சாதாரண நகரப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் (Deluxe) வகை அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இனி கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்க முடியும். மேலும், மாவட்டங்களுக்கு இடையிலான தொலைதூர்ப் பயணம், புறநகர்ப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் இயங்கும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இந்த கட்டணமில்லா வசதி அமல்படுத்தப்படும்.

இந்த சிறப்புச் சலுகையானது பெண்கள் மட்டுமன்றி, திருநர் மற்றும் திருநங்கைகளுக்கும் முழுமையாகப் பொருந்தும் என பேரவையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் 6,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திடீர் கைது! கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!

பேரவையில் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் இத்தகைய பெரிய நலத்திட்டங்கள், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஏற்கனவே சூடுபிடித்துள்ள விவாதங்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பையும் மக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளன.