“இனி நீங்க நம்ம குடும்பம்!” – தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினரை நெகிழ வைத்த அமைச்சர் என்.ஆனந்தின் அதிரடி உத்தரவாதம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வேக வளர்ச்சியை நோக்கிப் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் தொடர்ந்து அணிவகுத்து வரும் நிலையில், கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களை வரவேற்கும் மாபெரும் உள்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக அமைச்சர் என். ஆனந்த், மாற்று முகாம்களில் இருந்து வந்த நிர்வாகிகளை உருகவைக்கும் வகையில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தீர்க்கமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் மக்கள் செல்வாக்கையும், கட்சியின் அடித்தட்டு கொள்கைகளையும் சுட்டிக்காட்டி அவர் ஆற்றிய இந்த உரை தற்போது டிஜிட்டல் தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கூட்டத்தில் புதிய தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், “நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை நம்பி இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களுக்குண்டான மரியாதை கண்டிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் கொடுக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிரடி உத்தரவாதம் அளித்தார். மேலும், மாற்று கட்சியில் இருந்து வந்துவிட்டோமே என்ற எந்தவொரு அச்சமும், தயக்கமும் அவர்களுக்குள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், எப்போது தலைவர் தளபதியை நம்பி வந்துவிட்டீர்களோ, அப்போதே நீங்கள் அனைவரும் தவெக குடும்பத்தின் உறுப்பினர்களாக மாறிவிட்டீர்கள் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கடந்த 30, 32 வருடங்களாக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தளபதிக்காக உழைத்த பழைய தோழர்களுடன் இணைந்து, புதியவர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  எனக்கும் நக்கலா குட்டிக்கதை பேசத் தெரியும்! அவையில் இருந்து ஓடிய திமுகவிற்கு முதல்வர் விஜய் நக்கல்!: "5 நிமிஷம் பேசினதுக்கே கொளத்தூர் தொகுதி காலி!" சட்டமன்றத்தில் தவெக அரசு காட்டிய மாஸ் அதிரடி!

தவெக என்பது சாதாரண உழைப்பாளர்களுக்கான கட்சி என்பதை விளக்கிய அமைச்சர், ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டி, கொடி கட்டிய சாதாரண தொண்டர்கள் தான் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்ந்துள்ளனர் என்று பெருமிதத்துடன் கூறினார். தவெக மாநாடுகளின் பிரம்மாண்ட சாதனைகளை நினைவு கூர்ந்த அவர், விக்ரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் ஒத்த ரூபாய் காசு வாங்காமல் தங்களின் சொந்தப் பணத்தில் சுமார் 15 முதல் 16 லட்சம் மக்கள் வண்டி பிடித்து வந்து கலந்துகொண்டனர் என்றும், அதேபோல மதுரை மாநாட்டிலும் மக்கள் மதியமே திரண்டு வந்து தங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை நிரூபித்தனர் என்றும் குறிப்பிட்டார். வரவிருக்கும் உள்ளாட்சிப் பஞ்சாயத்துத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தவெக-வின் வெற்றியை உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும், புதிய நிர்வாகிகள் தங்களின் வார்டு மற்றும் ஒன்றிய பகுதிகளில் கொண்டு வரும் மக்கள் பிரச்சனைகளைத் தவெக அமைச்சர்கள் உடனடியாகத் தீர்த்து வைப்பார்கள் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.