“நான் இந்தியாளாவே சாகணும்!” அமெரிக்க குடியுரிமையை தூக்கி எறிந்த 94 வயது பாட்டி! நெகிழ வைக்கும் பின்னணி! அமெரிக்காவில் செட்டில் ஆன டாக்டர் மகன்! கணவர் மறைவுக்குப் பின் யுஎஸ் சென்ற பாட்டிக்கு வந்த திடீர் ஆசை! பாபட்லா கலெக்டரேட்டில் நடந்த உருக்கமான சம்பவம்!

இன்றைய காலகட்டத்தில் உயர் கல்விக்காகவும், கைநிறைய சம்பாதித்து ஆடம்பரமாக வாழவும் இந்திய இளைஞர்கள் பலரும் அமெரிக்கா, லண்டன் எனப் வெளிநாடுகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். ஆனால், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 94 வயது முதியவர் ஒருவர், சொகுசான அமெரிக்க வாழ்க்கையும் அங்குக் கிடைத்த குடியுரிமையையும் தூக்கி எறிந்துவிட்டு, தனது இறுதி மூச்சை இந்தியக் குடிமகளாகத் தான் விட வேண்டும் என்ற உன்னத ஆசையோடு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருப்பது ஒட்டுமொத்த தேசத்தையும் நெகிழ வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம், சினகஞ்சம் மண்டலத்தில் உள்ள சிந்தகும்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்ட்ருகுண்டா மகாலட்சுமம்மா (94). இவருடைய மகன் டாக்டர் புச்சய்ய சௌதரி பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் ஒரு மருத்துவராகச் சென்று அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார்.

இந்நிலையில், மகாலட்சுமம்மாவின் கணவர் நாகபூஷணம் காலமானதைத் தொடர்ந்து, தனியாக இருந்த தாயாரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மகன் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். இதனால் மகாலட்சுமம்மாவும் அமெரிக்காவிலேயே தங்கி, கடந்த 2000 ஆம் ஆண்டில் முறைப்படி அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றார். மகனுடன் அமெரிக்காவில் எவ்வித குறையும் இல்லாமல் சொகுசாக வாழ்ந்து வந்தாலும், பாட்டியின் மனம் எப்போதும் தான் பிறந்த கிராமத்து மண்ணையே சுற்றிக் கொண்டிருந்தது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சடாரென சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை! இன்றைய (24 ஜூன் 2026) நிலவரம் இதோ!: நேற்று விட இன்னைக்கு ரேட் அவ்ளோ கம்மி! 22 கேரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி!

தாய்நாட்டின் மீதும், தான் பிறந்த கிராமத்தின் மீதும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தின் காரணமாக, கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே தனது மகனின் குடும்பத்தினருடன் மகாலட்சுமம்மா மீண்டும் இந்தியாவுக்கே நிரந்தரமாகத் திரும்பி வந்துவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாகத் தனது சொந்த ஊரான சிந்தகும்பலாவிலேயே அவர் வசித்து வருகிறார்.

தற்போது 94 வயதைக் கடந்துவிட்ட நிலையில், அவர் தனது இறுதி ஆசையைத் தனது குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தியுள்ளார். “நான் பிறந்த இந்த மண்ணின் காற்று தான் என் இறுதி மூச்சில் கலக்க வேண்டும். நான் சாகும்போது ஒரு இந்தியக் குடிமகளாகத் தான் சாக வேண்டும். எனது உடல் இந்த மண்ணில் தான் எரிய வேண்டும்” என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். இந்த ஒரே காரணத்திற்காகத் தனக்குக் கிடைத்த உலகளவிலான உயரிய அமெரிக்கக் குடியுரிமையை அவர் தற்பொழுது முழு மனதுடன் துறந்துள்ளார்.

தனது இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, ஆன்லைன் மூலமாக மீண்டும் இந்தியக் குடியுரிமை கோரி மகாலட்சுமம்மா விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பப் பரிசீலனையின் ஒரு பகுதியாக நேற்று அவர் பாபட்லா மாவட்ட கலெக்டரேட்டிற்கு நேரில் அழைத்து வரப்பட்டார்.

மாவட்ட ஆட்சியர் பி. வினோத் குமார் முன்னிலையில், 94 வயதிலும் மிகவும் கம்பீரமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது கைவைத்து, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு என்றும் கட்டுப்பட்டு நடப்பேன் என்று மகாலட்சுமம்மா சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். பாட்டியின் இந்தத் தேசப்பற்றைக் கண்டு நெகிழ்ந்துபோன கலெக்டர் வினோத் குமார், இந்த விண்ணப்ப அறிக்கை உடனடியாக மாநில அரசு பரிந்துரையுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அமெரிக்க தூதரகத்திடம் இருந்து முறையான ஒப்புதல் கிடைத்தவுடன் பாட்டிக்கு மீண்டும் இந்தியக் குடியுரிமை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.