4 மாநில வோட்டர் ஐடி சர்ச்சை! நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீனில்லா வாரண்ட்! நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் அதிரடி நடவடிக்கை! கைது பயத்தால் சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் பிரகாஷ் ராஜ்!

சினிமாவில் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தாலும் நிஜ வாழ்க்கையில் பாஜாக மற்றும் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துப் பல்வேறு அரசியல் சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர் தொடர்ந்து இடதுசாரி ஆதரவு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எப்போது வேண்டுமானாலும் கைது நடவடிக்கை பாயலாம் என்ற மிக அதிர்ச்சிகரமான சட்ட சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிமுறைகளின்படி இந்தியக் குடிமகன் ஒருவருக்கு ஏதேனும் ஒரு தொகுதியில் அல்லது ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க அனுமதி உண்டு. ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் தலா ஒரு வாக்காளர் அடையாள அட்டையைச் சட்டவிரோதமாக வாங்கி வைத்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விதிமுறை மீறலை முன்வைத்து பெங்களூருவைச் சேர்ந்த திலீப்குமார் என்ற வழக்கறிஞர் கடந்த 2019-லேயே பெங்களூரு அல்சர் கேட் காவல் நிலையத்திலும் பின்னர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தார். இரு தரப்பிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! இனி போனில் ஒரு பைசா செலவில்லாமல் மாற்றலாம்! ₹75 கட்டணம் அதிரடி ரத்து! புதிய சலுகையை அறிவித்த யுஐடிஏஐ (UIDAI)! 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு!

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் குற்றச்சாட்டு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நடிகர் பிரகாஷ் ராஜுக்கு இரண்டு முறை அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியது. ஆனால் தனது படப்பிடிப்புகள் மற்றும் அரசியல் பயணங்களைக் காரணம் காட்டி பிரகாஷ் ராஜ் நீதிமன்ற விசாரணையில் நேரில் ஆஜராகாமல் சம்மனைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராகத் தற்போது ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரு காவல்துறையினர் எப்போது வேண்டுமானாலும் நடிகர் பிரகாஷ் ராஜைக் கைது செய்யலாம் என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பிரகாஷ் ராஜ் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வப் பொது அறிக்கையோ அல்லது மறுப்போ ஊடகங்களுக்கு இன்னும் நேரடியாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஜாமீனில்லா பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உடனடியாகக் கைதாவதிலிருந்து தப்பிக்க அவர் தனது நெருங்கிய சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் தீவிர அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரண்ட்டை ரத்து செய்யக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவோ அல்லது உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரவோ அவர் தரப்பு திட்டமிட்டு வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜாக தரப்பில் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நிலையில் பிரகாஷ் ராஜ் சட்டப்படி இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.