US-Iran War: “அமெரிக்காவின் எகனாமிக் டி-டே!” ஈரானின் ராணுவ பலம் காலி? உலகை உலுக்கும் போர் உச்சம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானின் ராணுவ பலம் மற்றும் தொழிற்கூடங்கள் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதல் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் அணுசக்தி திட்டங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ராணுவ நடவடிக்கை நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, போரை இறுதி நிலைக்குக் கொண்டு செல்லப் பொருளாதார ரீதியிலான புதிய தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரங்களையும் நிதி ஆதாரங்களையும் முற்றிலும் முடக்கும் வகையில், ‘எகனாமிக் டி-டே’ (Economic D-Day) என்ற பெயரில் இதுவரை இல்லாத அளவிலான மிகக் கடுமையான தடைகளை அமெரிக்கா விதிக்க உள்ளது. ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருக்கும் பிற நாடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் கடுமையான நிபந்தனைகளும், எச்சரிக்கைகளும் விதிக்கப்படவுள்ளன.

ஈரானுக்கு சர்வதேச அளவில் கிடைக்கும் நிதி மற்றும் வர்த்தக உதவிகளை முழுமையாகத் துண்டிப்பதே இந்த ‘எகனாமிக் டி-டே’ திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலளித்துள்ள ஈரான், இத்தகைய பொருளாதாரப் போர்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், ஹார்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகத் தடைகள் மூலம் தக்க பதிலடி அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Shockwaves in Global Energy Market! Iran Shuts Strait of Hormuz! "கப்பல்கள் சிறைபிடிப்பு? கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!" இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் ராணுவம் பகிரங்க பதிலடி! இந்தியாவிற்கு பாதிப்பா?