தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டிவரும் எதிர்க்கட்சிகள், தற்போது வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்களை முன்வைத்து ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளிவந்த செய்திகள் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்!
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே அந்த மாவட்ட ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 9, 2026
“இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?” என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு நேரடி கேள்வி!
தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் கொலைச் சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார். “ஒருபுறம் மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களின் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய் திறக்கப் போவதில்லை. முதலமைச்சர் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார்.