ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், எதிர்பாராதவிதமாக லிஃப்ட் திடீரெனக் கீழ்நோக்கி நகர்ந்ததால் தரைக்கும் லிஃப்ட்டுக்கும் இடையே சிக்கிய 50 வயது பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒங்கோலின் மார்க்கெட் சென்டர் பகுதியில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சாய் சூர்யா அபார்ட்மெண்ட்ஸ்’ குடியிருப்பில் வசித்து வந்த வினிதா (50) என்ற பெண்மணி, தனது மகள் மற்றும் பேரனுடன் கீழே இறங்குவதற்காகப் பணி நிமித்தமாக லிஃப்ட்டைப் பயன்படுத்தியுள்ளார். லிஃப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்ததும், கதவுகள் திறந்த நிலையில் அவரது மகளும் பேரனும் பாதுகாப்பாக வெளியே அடி எடுத்து வைத்தனர். தொடர்ந்து வினிதா வெளியேற முயன்ற போது, லிஃப்ட்டின் தானியங்கி கதவுகள் மூடுவதற்கு முன்பாகவே எதிர்பாராதவிதமாக அது திடீரெனக் கீழ்நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.
🚨 లిఫ్ట్లో ఇరుక్కుని మహిళ మృతి
🔸 ఒంగోలులోని మార్కెట్ సెంటర్ సాయి సూర్య అపార్ట్మెంట్ లిఫ్ట్లో 50 ఏళ్ల మహిళ ఇరుక్కున్నారు.
🔸 లిఫ్ట్లో చిక్కుకుని స్పృహ తప్పిన ఆమెను ఆసుపత్రికి తరలించారు.
🔸 చికిత్స పొందుతూ మహిళ మృతి చెందారు.#Ongole #AndhraPradesh pic.twitter.com/r8SQZN9T1t
— ముచ్చట్లు | Stories • Voices • Views (@muchatlu_) August 19, 2026
கண்மூடித் திறப்பதற்குள் நிகழ்ந்த இந்தத் திடீர் நகர்வால் தடுமாறிய வினிதா, ரயிலின் தரைப்பகுதிக்கும் கீழ்நோக்கிச் சென்ற லிஃப்ட்டுக்கும் இடையே மாட்டிக்கொண்டு பலத்த காயமடைந்து அலறினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகளும் குழந்தையும் கதறியபடியே லிஃப்ட்டை மேல்நோக்கி வரவழைக்க பொத்தான்களை (Lift Buttons) அழுத்தி முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார் மற்றும் குடியிருப்பாளர்கள் விரைந்து செயல்பட்டு, லிஃப்ட்டின் இடையே சிக்கியிருந்த வினிதாவை மீட்டு அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வினிதாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, நினைவு தப்பியது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள், லிஃப்ட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா? அல்லது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த இந்தச் சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





