வாடகைக்குக் கணவன்! எந்த நாட்டுல தெரியுமா? பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விசித்திர சேவை!

ஐரோப்பியக் கண்டத்தில் அமைந்துள்ள சிறிய அழகான நாடான லாத்வியாவில் (Latvia), “வாடகைக்குக் கணவன்” (Husband for Rent) என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் ஒரு விசித்திரமான சேவை தற்போது உலகளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

பெயர் கோமாளித்தனமாகவும் விசித்திரமாகவும் இருந்தாலும், இந்த சேவைக்கும் காதல், திருமணம் அல்லது உடலுறவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதுதான் இதன் மிக முக்கிய சிறப்பம்சமாகும். தனியாக வசிக்கும் பெண்களுக்கு வீட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் உதவி செய்வதற்காக மட்டுமே இந்தச் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

லாத்வியா நாட்டின் மக்கள்தொகை அமைப்பில் நிலவும் மிகப்பெரிய பாலின சமநிலையின்மையே இந்த சேவை உருவாவதற்கான முதன்மையான காரணமாகும். அந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கை சுமார் 15.5% அதிகமாக உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள் வீடுகளில் தனியாகவே வசிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

பொதுவாக வீடுகளில் செய்யப்பட வேண்டிய கடினமான பிளம்பிங் வேலைகள், தச்சு வேலைகள், மின்சாரப் பழுதுகள், மற்றும் சுவரில் தொலைக்காட்சியை மாட்டுவது போன்ற தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் பணிகளைத் தனியாக இருக்கும் பெண்களால் உடனடியாகச் செய்ய முடிவதில்லை.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஃபோக்ஸ்வேகன் அதிரடி முடிவு: 2030-க்குள் 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகவே தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புச் சேவையாக “வாடகைக்குக் கணவன்” திட்டம் களமிறக்கப்பட்டது. தொழில்முறை நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் அழைப்பின் பேரில் வீடுகளுக்குச் சென்று, கணவன்மார்கள் செய்யக்கூடிய அனைத்து விதமான வீட்டுப் பராமரிப்பு வேலைகளையும் மணிநேரக் கட்டண அடிப்படையில் திறம்படச் செய்து தருகின்றனர். பெயர் மட்டுமே விசித்திரமாக உள்ளதே தவிர, இது முற்றிலும் தொழில்முறை சார்ந்த ஒரு சேவை அமைப்பாக இயங்கி வருவதுடன், அந்நாட்டுப் பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.