“20 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த அவமானம்!” திமுகவிலிருந்து விலகினார் மீனா ஜெயக்குமார்! பெண்ணின் கண்ணியத்தை சிதைப்பதாகக் கண்ணீர் அறிக்கை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த முக்கிய பெண் நிர்வாகி மீனா ஜெயக்குமார், தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக விலகியுள்ளார். தம்மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறுகளாலும், ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட சமூக வலைத்தளத் தாக்குதல்களாலும் மனவேதனை அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மீனா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அந்த நீண்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தவிதமான பதவியோ அல்லது லாப நோக்கமோ எதிர்பாராமல் தலைமைக் கழகம் வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார். தொகுதி பார்வையாளராகப் பல்வேறு மாவட்டங்களிலும், கிராமங்களிலும் தங்கி கட்சிக்காக உழைத்ததையும், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் இரவு, பகல் பாராமல் தினமும் சுமார் 200 கி.மீ. தூரம் பயணம் செய்து தீவிர தேர்தல் பணியாற்றியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இத்தகைய கடின உழைப்பிற்குப் பின்னால் இருந்தது வெறும் இயக்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் பற்றுமே தவிர, பதவி ஆசை அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “நான் இந்தியாளாவே சாகணும்!” அமெரிக்க குடியுரிமையை தூக்கி எறிந்த 94 வயது பாட்டி! நெகிழ வைக்கும் பின்னணி! அமெரிக்காவில் செட்டில் ஆன டாக்டர் மகன்! கணவர் மறைவுக்குப் பின் யுஎஸ் சென்ற பாட்டிக்கு வந்த திடீர் ஆசை! பாபட்லா கலெக்டரேட்டில் நடந்த உருக்கமான சம்பவம்!

இதன் காரணமாகவே தான் மிகுந்த மனவேதனையுடன் தி.மு.க.விலிருந்து விலகுவதாகவும், இதன் மூலம் தனக்கும் அந்த கட்சிக்கும் இருந்த அனைத்து அரசியல் தொடர்புகளும் நிறைவடைகின்றன என்றும் அறிவித்துள்ளார். மேலும், இனி தான் யாரைச் சந்தித்தாலும், யாருடன் பேசினாலும் அது தனது தனிப்பட்ட உரிமை என்றும், அதை விடுத்துத் தனது மரியாதையைச் சிதைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணின் கண்ணியத்தை அரசியல் ஆயுதமாக மாற்றுபவர்கள், முதலில் தாங்களும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று சாடியுள்ள அவர், தன் மீது ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புபவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, திமுகவின் தற்போதைய தோல்விகளுக்கும், கட்சியை விட்டுப் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வெளியேறுவதற்கும் வெளியிலிருந்து வரும் காரணங்கள் எதுவும் இல்லை என்றும், கட்சிக்குள்ளேயே இருக்கும் சில கீழ்த்தரமான நபர்கள்தான் முழு முதற்காரணம் என்றும் கட்சியின் உள்கட்சி பூசலை வெளிப்படையாக உடைத்துப் பேசியுள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகக் கொங்கு மண்டல திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! இனி போனில் ஒரு பைசா செலவில்லாமல் மாற்றலாம்! ₹75 கட்டணம் அதிரடி ரத்து! புதிய சலுகையை அறிவித்த யுஐடிஏஐ (UIDAI)! 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு!