Viral Video: “விஜய்க்கு வீடியோவை அனுப்பவா?” – லஞ்சம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!

தமிழ்நாட்டில் சோதனை என்ற பெயரில் பணம் கேட்ட காவல்துறையினரிடம், “தளபதி விஜய்க்கு இந்த வீடியோவை அனுப்பி புகாரளிப்பேன்” என்று வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் எச்சரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. லஞ்ச ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவேன் என உறுதியளித்துள்ள முதலமைச்சர் விஜய்யின் பேச்சை மேற்கோள் காட்டி தவெகவினர் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள், உங்களுடன் நான் இருக்கிறேன்; இது எங்கள் விஜயோட ஆட்சி என்று உறுதியாகச் சொல்லுங்கள்” எனப் பேசியிருந்தார். இதனிடையே, தமிழக நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்தி அபராதம் விதிக்கும் மெஷினுடன் நின்றுகொண்டிருந்த காவலர் ஒருவர் ஓட்டுநரிடம் பில் எங்கே எனக் கேட்டு சோதனை செய்துள்ளார்.

அப்போது அந்தச் சம்பவத்தைக் கைபேசியில் வீடியோ எடுத்த வடமாநில லாரி ஓட்டுநர், “எனது லாரியின் கண்டெய்னர் காலியாக உள்ளது, அதில் சீல் கூட இல்லை. ஆனால் இந்த காவலர் தேவையின்றி அபராதம் விதிக்கும் வகையில் பணம் கேட்கிறார். தளபதி விஜய் எண் என்னிடம் உள்ளது, இந்த வீடியோவை அவருக்கு அனுப்பிப் புகாரளிப்பேன்” என்று தைரியமாகப் பேசுகிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Free LPG: சட்டப்பேரவையில் புயல் கிளப்பிய "அன்னபூரணி சூப்பர் 6"! ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்... முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், DVAC லஞ்ச ஒழிப்புத்துறை மின்னஞ்சல் ([email protected]) மற்றும் தொலைபேசி எண்கள் (044-22321090, 22321085) மூலமாகவும் மக்கள் புகார்களைப் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.