அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கை: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027-ம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு (UG) மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள மாணவர்கள் tngasa.com (https://www.collegeadmission.in/page/tngasa-23/notice) என்ற இணையதளம் வாயிலாக நாளை முதல் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் மே மாதம் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவி:
வீடுகளில் இணையதள வசதி இல்லாத அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கச் சிரமப்படும் மாணவர்களுக்காகத் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அனைத்து அரசு கல்லூரிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Help Centres – AFC) மூலம் மாணவர்கள் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





