Massive Changes In Budget: பட்ஜெட்டில் அதிரடி! CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! ஊழல் அதிகாரிகளுக்கு செக்!

தமிழகத்தில் TVK அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கான உயர் மட்ட அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனையின் போது, சட்டமன்றத் தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை இந்த முதல் நிதிநிலை அறிக்கையிலேயே செயல்படுத்துவது குறித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். திருவான்மையூர் முதல் உத்தண்டி வரையிலான பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை தற்பொழுது விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் டெண்டர் மதிப்பீடுகள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பழனி கோவில் நில மோசடி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தற்பொழுது இருக்கும் பெரும்பாலான சார்பதிவாளர்கள் மீது ஊழல் பின்னணிகள் மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குற்றம் சாட்டினார். பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் கவலையில்லை என்ற மனநிலையில் வேலை பார்த்து வருவதாகவும், பெரும் பணம் புழங்கும் இந்த துறையை முழுமையாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயம் மற்றும் நேரம் தற்பொழுது வந்துள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இதன் மூலம் ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "கைது ஒரு காமெடி நாடகம்!" - நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் முதலமைச்சர் விஜய் தலைமையில் வேளாண் துறை சார்ந்த மற்றுமொரு முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. வரவிருக்கும் காலங்களில் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) காலநிலை மாற்றத்தால் தமிழக வேளாண் துறையில் ஏற்படக் கூடிய கடுமையான பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து விவசாயிகளையும் பயிர்களையும் பாதுகாக்க அரசு உடனடியாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மானிய திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. TVK அரசின் இந்த அதிரடி பட்ஜெட் ஆலோசனைகள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.