“திமுகவும் அதிமுகவும் ஒண்ணுதான்!” – விவசாய பட்ஜெட் உரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி!

மாநில விவசாய பட்ஜெட் 2026-27 தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில், அரசின் மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடு மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை குறித்து மாநில அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிக முக்கியக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எந்தவொரு ஆட்சி அமைந்தாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல திட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதும், தேவைக்கேற்ப அதைச் சீரமைப்பதும் ஜனநாயகத்தின் வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்த அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரே தராசில் வைத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசு திட்டங்களின் தொடர்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் ஏராளமான திட்டங்கள் இருக்கும். அதில் மாநில மக்களுக்கும், தமிழ்நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்களை எந்த அரசு வந்தாலும் முன்னெடுத்துச் செல்லும். அப்படித்தான் இதுவரை அனைத்து அரசாங்கங்களும் செயல்பட்டு வந்துள்ளன. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், அது பல ஆண்டுகளுக்கு முன்பே பெருந்தலைவர் காமராஜரால் கொண்டுவரப்பட்டு, பின்னர் எம்.ஜி.ஆரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. தற்போது இருக்கும் திட்டத்திற்குள் ஏதேனும் சீரமைப்பு செய்யப்பட வேண்டியிருந்தால், அது நிச்சயமாகச் செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இதுவரை யாரும் செய்யாத புரட்சி!" தவெக அரசின் நடவடிக்கை குறித்து பிரேமலதா நெகிழ்ச்சி!

அரசுத் திட்டங்களின் நோக்கம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதன்பின்னர் அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சன முன்வைத்தார். “திமுகவும் அதிமுகவும் கைகோர்த்துச் செயல்படுகின்றன (Hand in glove). அவர்கள் இருவருமே ஒன்றுதான். எனவே, அவர்களிடமிருந்து எந்தவொரு நேர்மறையான பதிலையோ அல்லது நல்ல விஷயத்தையோ நாம் எதிர்பார்க்க முடியாது” என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாகக் கூறினார்.

விவசாய பட்ஜெட் 2026-27 தொடர்பாகவும், மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்தும் அரசியல் களத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக – அதிமுக இரு கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.