“விஜய், தனுஷ், அண்ணாமலை மும்முனைத் தாக்குதலா?” – எழுத்தாளர் சூர்யா சேவியர் பதிவுக்கு இயக்குநர் மோகன் ஜி அதிரடி பதிலடி!

தமிழக அரசியல் மற்றும் திரையுலகை இணைத்து எழுத்தாளர் சூர்யா சேவியர் வெளியிட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தும் பதிவும், அதற்கு இயக்குநர் மோகன் ஜி அளித்த காரசாரமான பதிலடியும் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளன.

எழுத்தாளர் சூர்யா சேவியர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “தமிழ்நாட்டிற்குள் கால் பதிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மயிலாப்பூர் ராஜமுந்திரி குருமூர்த்தியின் திட்டங்கள் பலன் தராததால், தற்போது நடைமுறையை மாற்ற முடிவெடுத்துள்ளனர். திராவிடம் மற்றும் தமிழ்நாடு என்ற உணர்வைச் சிதைக்கத் தமிழர்களின் சினிமா மோகம், ஒன்றிய அதிகாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விஜய் மூலம் முதல் இலக்கை அடைந்துவிட்டார்கள். சிறுபான்மையினர் பிரதிநிதியாக ஜோசப் என்ற அடையாளத்துடன் கூடிய பொம்மையாக விஜய் இருக்கிறார். மற்றொருபுறம் பிற்படுத்தப்பட்டோரை ஒருங்கிணைக்க அண்ணாமலையும், அதற்கு வலு சேர்க்க தனுஷும் களமிறக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “தனுஷின் ‘ஓம்’ என்ற திரைப்படத் தலைப்பும் தேசிய விருதுகளும் தற்செயலானது அல்ல. பெரும் மக்கள்திரள் விளக்குகளைக் காட்டும் காட்சிகள் மூலம் மக்களிடம் உளவியல் தாக்குதல் தொடங்கப்படுகிறது. ஜோசப் விஜய் + அண்ணாமலை + தனுஷ் ஆகிய மூவரும் மாற்று முகங்களுடன் மறைமுகமாக நடத்தும் மும்முனைத் தாக்குதலில் தான் அடுத்த கட்ட அரசியல் நகரப்போகிறது” என்றும் சூர்யா சேவியர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Rajinikanth Breaks His Silence! — "விஜய் மீது எனக்கு பொறாமையா?" — ஸ்டாலின் சந்திப்பு முதல் தவெக தொண்டர்களுக்கு எச்சரிக்கை வரை; ரஜினிகாந்த் வெளியிட்ட அனல் பறக்கும் அறிக்கை!

சூர்யா சேவியரின் இந்தப் பதிவைப் பகிர்ந்து உடனே பதிலடி கொடுத்த இயக்குநர் மோகன் ஜி, “இவங்க எல்லாரும் பித்து புடிச்சி அலைய ஆரம்பிச்சிட்டாங்க… இனி திராவிடம் இங்கே தலை எடுக்காது.. இது ஆன்மீக மண்.. உங்க ஆட்டம் எல்லாம் முடிந்தது.. இனி கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. வெற்றிமாறன் சார் முருகன் படம் எடுத்து தான் ஆகனும்.. ஓம், நமச்சிவாய போன்ற தலைப்புகள் வரும்..” எனப் பதிவிட்டுள்ளார். இத்தகைய சினிமா மற்றும் அரசியல் கலந்த கருத்து மோதல், திரையுலகினர் மற்றும் அரசியல் ஆய்வாளர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.