ரயில்வே துறையில் வணிகம் செய்ய விரும்புபவர்களுக்கும், உணவு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு புதிய நற்செய்தியைத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – திருப்பதி – சென்னை சென்ட்ரல் (MAS–TPTY–MAS) இடையே இயங்கும் ரயில் எண்கள் 16203/16204 எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயிலின் பக்கவாட்டு உணவு விநியோகச் சேவைக்கு (Train Side Vending – TSV Services) வணிக விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
📢 Invitation for Quotations
Southern Railway invites eligible bidders for Train Side Vending (TSV) Services on Train Nos. 16203/16204 (MAS–TPTY–MAS).
🗓️ Bid Closing: 24.09.2026 | ⏰ 15:00 Hrs
🌐 Participate through the IREPS Portal.
🔗 https://t.co/vh7B5yW5dc#SouthernRailway… pic.twitter.com/kISbGQkdyC— drm_chennai (@DrmChennai) September 10, 2026
தெற்கு ரயில்வேயின் வர்த்தகப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டரின் விளம்பர மதிப்பு (Advertised Value) ₹1,25,322 ஆகும். இந்த ஒப்பந்தத்தின் காலம் 1 ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் காப்புத் தொகையாக (EMD / Bid Security) ₹2,500 செலுத்த வேண்டும்.
முக்கியத் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
-
உணவுத் தொழிலில் குறைந்தபட்சம் ₹1 கோடி ஆண்டு விற்றுமுதல் (Annual Turnover) இருக்க வேண்டும்.
-
கேட்டரிங் அல்லது விருந்தோம்பல் துறையில் (Catering / Hospitality) குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
-
செல்லுபடியாகும் FSSAI, GSTIN மற்றும் PAN சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.
-
சொந்தமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சான்றளிக்கப்பட்ட சமையலறை (Certified Kitchen) இருக்க வேண்டும்.
-
விண்ணப்பதாரர்கள் தனிநபராகவோ, நிறுவனமாகவோ அல்லது கூட்டாண்மை நிறுவனமாகவோ இருக்கலாம்.
-
சென்னை கோட்டத்திற்குள் பேன்ட்ரி கார், ஃபுட் பிளாசா, ஜன் ஆஹார் அல்லது நிலையான உணவு அரங்கம் போன்ற ஏதேனும் ஒரு சேவை மையம் இயங்கி வர வேண்டும்.
-
கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித கருப்புப் பட்டியலிலும் (Blacklisting) இடம்பெற்றிருக்கக் கூடாது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இ-கொள்முதல் போர்ட்டலான IREPS (www.ireps.gov.in) வழியே மட்டுமே தங்களது விலைப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கச் செப்டம்பர் 24, 2026 பிற்பகல் 15:00 மணி இறுதி நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





