சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, எழும்பூர் ரயில் நிலைய யார்டு பகுதியில் புதிய நடைமேம்பாலத்திற்கான (Foot Over Bridge – FOB) பிரம்மாண்ட இரும்பு அமைப்புகளை (Girders) நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் மின்சார மற்றும் மின்சார ரயில் தடங்கல்கள் (Line Block/Power Block) அமல்படுத்தப்படவுள்ளன. ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரையிலான காலத்தில் இரவு நேர மின்சார ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே முக்கிய மாற்றங்களையும் பகுதி ரத்துகளையும் அறிவித்துள்ளது.
📢 Chennai Egmore Redevelopment Works | EMU Service Changes🚆
🚧 Due to ongoing redevelopment works at Chennai Egmore Railway Station, the Line Block/Power Block at #ChennaiEgmore Yard for launching Foot Over Bridge (FOB) girders has been rescheduled to 25th August – 06th… pic.twitter.com/JxUVODO8u8
— drm_chennai (@DrmChennai) August 23, 2026
முழுமையாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு நேரத்தில் புறப்படும் பின்வரும் 4 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன:
-
இரவு 10:20 மணி ரயில்
-
இரவு 11:20 மணி ரயில்
-
இரவு 11:40 மணி ரயில்
-
இரவு 11:59 மணி ரயில்
பகுதியாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்:
-
திருமால்பூர் – சென்னை கடற்கரை: திருமால்பூரில் இருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரம் – கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
-
கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை: கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10:15 மற்றும் 11:20 மணிக்கு புறப்படும் ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
-
செங்கல்பட்டு – சென்னை கடற்கரை: செங்கல்பட்டில் இருந்து இரவு 10:20 மற்றும் 11:00 மணிக்கு புறப்படும் ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
-
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு (அதிகாலை சேவை): ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3:50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், கடற்கரை – தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருந்தே புறப்படும்.
நேர மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்:
-
சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரவு 9:45 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், இரவு 9:50 மணிக்கு தாமதமாகப் புறப்படும்.
-
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இரவு 10:20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், இரவு 10:15 மணிக்கே முன்னதாகப் புறப்படும்.
இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் இந்த அட்டவணை மாற்றங்களைக் கவனித்து, தங்களின் பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.





