திருமலை ஸ்ரீவாரி சலக்கட்ல பிரம்மோற்சவம் 2026: வாகன சேவைகள் முழு அட்டவணை வெளியீடு!

உலகப் புகழ்பெற்ற திருமலை ஸ்ரீவாரி திருக்கோயிலில் இந்த ஆண்டு பக்தர்களை பக்தி வெள்ளத்தில் மூழ்கடிக்கும் வகையில் இரட்டை பிரம்மோற்சவ விழாக்கள் கோலாகலமாக நடைபெறவுள்ளன. ஒன்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீவாரி சலக்கட்ல (வருடாந்திர) பிரம்மோற்சவம் செப்டம்பர் 15 முதல் 23 வரையிலும், அதனைத் தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 12 முதல் 20 வரையிலும் நடைபெறவுள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.

முக்கிய பிரம்மோற்சவ விழாக்களுக்கு முன்னோடியாகச் செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை ‘அங்குரார்பணம்’ நிகழ்வுடன் கொண்டாட்டங்கள் முறைப்படி தொடங்குகின்றன. விழா நாட்களின் போது தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மீண்டும் மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மலையப்பசுவாமி மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.

பிரம்மோற்சவ வாகன சேவைகள் அட்டவணை (செப்டம்பர் 15 – 23, 2026):

  • செப்டம்பர் 15 (செவ்வாய்): மாலை – த்வஜாரோஹணம்; இரவு 9:00 மணி – பெரிய சேஷ வாகனம்.

  • செப்டம்பர் 16 (புதன்): காலை 8:00 – சின்ன சேஷ வாகனம்; மதியம் 1:00 – 3:00 – ஸ்நபனம்; மாலை 7:00 – ஹம்ச வாகனம்.

  • செப்டம்பர் 17 (வியாழன்): காலை 8:00 – சிம்ம வாகனம்; மாலை 7:00 – முத்துப்பந்தல் வாகனம்.

  • செப்டம்பர் 18 (வெள்ளி): காலை 8:00 – கல்பவிருட்ச வாகனம்; மாலை 7:00 – சர்வபூபால வாகனம்.

  • செப்டம்பர் 19 (சனி): காலை 8:00 – மோகினி அவதாரம்; மாலை 6:30 – இரவு 11:30 – புகழ்பெற்ற கருட சேவை.

  • செப்டம்பர் 20 (ஞாயிறு): காலை 8:00 – ஹனுமந்த வாகனம்; மாலை 4:00 – ஸ்வர்ண ரதம்; மாலை 7:00 – கஜ வாகனம்.

  • செப்டம்பர் 21 (திங்கள்): காலை 8:00 – சூரியப்ரப வாகனம்; மதியம் 1:00 – 3:00 – ஸ்நபனம்; மாலை 7:00 – சந்திரப்ரப வாகனம்.

  • செப்டம்பர் 22 (செவ்வாய்): காலை 7:00 – ரத்தோற்சவம்; மாலை 7:00 – அஸ்வ வாகனம்.

  • செப்டம்பர் 23 (புதன்): காலை 6:00 – 9:00 – சக்கரஸ்நானம்; இரவு – த்வஜாவரோஹணம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மகா விசேஷமான சிவலிங்க அபிஷேகம்: எருக்கம்பூ முதல் தாமரை வரை ஈசனை மகிழ்விக்கும் பொருட்களின் ரகசிய பலன்கள்!

பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கியமான நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என்பதால், தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கான தங்குமிடம், தரிசனம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் தீவிரமாகச் செய்து வருகிறது.