“கொளத்தூர் மக்கள் மீதான அடக்க முடியாத கோபம்!” – மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!

வெடித்தது அடுத்தக்கட்ட அரசியல் சர்ச்சை! சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஆளும் தவெக அரசைக் கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதி மக்களைப் பற்றிக் குறிப்பிட்ட பேச்சு தற்போது மாநில அரசியலில் புதிய விவாதத்தையும் பெரும் புயலையும் கிளப்பியுள்ளது. ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் மிகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நன்றி சொல்வது ஜனநாயகப் பண்பு… ஆனால் இது விரக்தி!” மு.க.ஸ்டாலினின் பேச்சை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், “தேர்தல் களத்தில் வெற்றிபெற முடியாமல் போனால் கூட, தங்களுக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் உண்மையான அரசியல் நாகரிகம் மற்றும் உயரிய ஜனநாயக பண்பாடாகும். ஆனால், திமுக தலைவரின் பேச்சு அந்தப் பண்பாட்டிற்கு முற்றிலும் மாறாக அமைந்துள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொளத்தூர் மக்கள் மீது அடக்க முடியாத கோபம்!” தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது ‘நல்லவேளை கொளத்தூர் மக்கள் என்னை ஜெயிக்க வைத்து சட்டமன்றத்திற்குள் அனுப்பாததற்க்கு நன்றி, தப்பித்தோம்’ என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். தன்னைத் தோற்கடித்ததற்காகவே கொளத்தூர் மக்களுக்கு அவர் நன்றி தெரிவிப்பது போலக் கிண்டலாகப் பேசியதன் பின்னணியில், அவரது அடக்க முடியாத கோபமும், மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் விரக்தியுமே அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது” எனக் சாடியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  TVK Vijay Tirunelveli Speech : "இது கேர்-டேக்கர் கவர்மெண்ட்!" – நெல்லையில் கர்ஜித்த தளபதி விஜய்!

அரசியல் நாகரிகம் தவறிய உரை: மக்களின் வாக்களிக்கும் உரிமையையும் அவர்களின் முடிவையும் கேலி செய்யும் வகையில் ஒரு மூத்த தலைவர் பேசுவது ஏற்புடையதல்ல என்றும், கொளத்தூர் தொகுதி வாக்காளர்களை மறைமுகமாகப் பழிவாங்கும் தொனியில் ஸ்டாலின் பேசியுள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார். முப்பெரும் விழா மேடையில் ஸ்டாலின் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடுத்து வரும் இந்தத் தாக்குதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.