“நீ யாருக்கு பிறந்தாய் என்பதில் சந்தேகம்!” – முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல் குமாரை அசிங்கமாக விமர்சித்த ஆ.ராசா!

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத வகையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர் எல்லைமீறி உச்சக்கட்ட நச்சுத்தனத்தை எட்டியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டுச் சந்தித்த துன்புறுத்தல்கள் குறித்துச் சட்டமன்றத்தில் தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விகள் திமுகவினரைக் கடுமையாகக் கொந்தளிப்படையச் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகச் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, முதலமைச்சர் விஜயையும் அமைச்சரையும் மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் அசிங்கமாக விவரித்து அரசியல் களத்தில் பெரும் தீயைப் பற்ற வைத்துள்ளார்.

ஆர்ப்பாட்ட மேடையில் ஏறி ஆவேசமாகப் பேசிய ஆ.ராசா, முதலமைச்சர் விஜயை ஒருமையில் அழைத்துத் தன் கடுமையானத் தாக்குதலைத் தொடங்கினார். “சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தெரியாமல், திரையில் ‘தொட்டபெட்டா மலை மேல முட்டை பரோட்டா’ எனப் பாடி ஆடியவர் தன்னை மகா நடிகன் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அவர் மகா நடிகன் அல்ல; மகா அயோக்கியன்! கொலஸ்ட்ரால் மனிதனின் ரத்தத்தில் மட்டுமே இருக்கலாம், மூளையில் இருக்கக்கூடாது” என முதலமைச்சரின் பதவியைக் கொச்சைப்படுத்தி மிகக் கடுமையான சொற்களால் வசைபாடினார்.

இதனைத் தொடர்ந்து, மிசா கைது குறித்துத் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வரும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது தன் நஞ்சைக் கக்கிய ஆ.ராசா, “என் தலைவன் மு.க.ஸ்டாலின் மிசாவில் பட்ட தியாகத்தையும் அடியையும் நீ சந்தேகிக்கிறாய் என்றால், நீ யாருக்காகப் பிறந்தாய் என்பதில் எனக்குப் பெரிய சந்தேகமே இருக்கிறது! தைரியமிருந்தால் என் மீது வழக்கு போட்டுக்கொள்” என வெளிப்படையாகவே அவரது பிறப்பையே சந்தேகப்பட்டு மிகத் தரக்குறைவான தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டார்.

23 வயதில் தாடை உடைக்கப்பட்டுச் சிறையில் கொடூரமாக அடிவாங்கிய ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்த யாருக்கும் தகுதியில்லை என்றும், திமுக நாகரிகத்தின் உச்சம் எனக் கூறிக்கொண்டே நாகரிக எல்லைகள் அனைத்தையும் மீறி ஆ.ராசா பேசிய இந்த ஆவேசப் பேச்சு, தவெக தொண்டர்கள் மற்றும் நடுநிலையாளர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, அரசியல் களத்தை ரணகளமாக்கியுள்ளது.