சென்னை ஐஐடி (IIT Madras) தலைமையிலான டிஜிட்டல் கற்றல் தளமான சுவயம் பிளஸ் (SWAYAM Plus), ‘அனைவருக்கும் ஏஐ’ (AI for All) என்ற பிரச்சாரத்தின் கீழ் மூன்று புதிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக ஐஐடிஎம் பிரவர்தக் (IITM Pravartak) நிறுவனத்துடன் சென்னை ஐஐடி கைகோர்த்துள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே, இந்தப் படிப்புகளைக் கற்க எந்தவிதமான கோடிங் (Coding) அனுபவமும் தேவையில்லை என்பதுதான். தொழில்நுட்பப் பின்னணி இல்லாதவர்களும், மற்ற துறை மாணவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய படிப்புகள் மற்றும் கால அளவு:
-
AI for Aspiring Engineers – 35 மணிநேரம்
-
AI for Administrators – 35 மணிநேரம்
-
Prompt Engineering – 30 மணிநேரம்
முக்கியத் தகவல்கள்: மேற்கண்ட மூன்று படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க மே 10, 2026 கடைசி தேதியாகும். இவை அனைத்தும் ‘கிரெடிட்’ (Credit Eligible) பெறக்கூடிய படிப்புகள் என்பதால், கல்லூரி மாணவர்கள் இந்தப் படிப்பை முடிப்பதன் மூலம் கூடுதல் மதிப்பெண்களை (Academic Credits) பெற முடியும்.
யார் சேரலாம்? நிர்வாகத் துறையில் இருப்பவர்கள், பொறியியல் மாணவர்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தை (ChatGPT போன்ற கருவிகளை) ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த விரும்பும் எவர் வேண்டுமானாலும் இதில் சேரலாம். இதற்கெனத் தனியாகப் புரோகிராமிங் அறிவு தேவையில்லை என்பதால், கலை மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஆர்வமுள்ளவர்கள் swayam-plus.swayam2.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் மே 10-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.