உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் (Instagram), சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பிராண்டின் முக்கிய அடையாளமான ‘வேர்டுமார்க்’ (Wordmark) எழுத்து வடிவமைப்பைப் புதுப்பித்துள்ளது. பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த புதிய வடிவமைப்பு மிகவும் எளிமையாகவும், நவீன அழகியலுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த வடிவமைப்பு மாற்றப்பட்டிருந்தாலும், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் பழைய பாரம்பரிய அடையாளமும் அதன் தனித்துவமான எளிமையும் மாறாமல் தக்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, INSTAGRAM-ன் பழைய அடையாளத்தையும், அதன் தனித்துவமான எளிமையையும் தக்கவைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் திரைகளில் செயலியின் பயன்பாட்டை மேலும் தடையற்றதாகவும், பார்க்க அழகாகவும் மாற்றுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம், சமீபகாலமாகப் பல்வேறு புதிய வசதிகளையும், வடிவமைப்பு மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ஒரு தசாப்தத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்த பிராண்டிங் புதுப்பிப்பு, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.