இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளமான IRCTC, பயணிகளின் நீண்ட நாள் குறையைப் போக்கும் வகையில் தனது இணையதள சேவையை அதிரடியாக மேம்படுத்தி புதிய கிளவுட் (Cloud) தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பாரம்பரிய பிஆர்எஸ் (PRS) கட்டமைப்பு முறைக்கு மாற்றாக இந்த நவீன கிளவுட் முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கிளவுட் தொழில்நுட்பம்: நெரிசல் மற்றும் சர்வர் முடக்கத்தைத் தவிர்க்க ஒட்டுமொத்த முன்பதிவு அமைப்பும் நவீன கிளவுட் (Cloud Based) முறைக்கு மாற்றம்.
அதிவேக புக்கிங்: இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தளம் மூலம் தட்கல் மற்றும் சாதாரண நேரங்களில் நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளைச் தடையின்றி புக் செய்ய முடியும்.
சர்வர் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி: ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கின் போது ஏற்படும் ‘சர்வர் எரர்’ மற்றும் பணப் பரிவர்த்தனை தோல்விகளுக்கு இனி தீர்வு கிடைக்கும்.
எளிமையான வடிவமைப்பு: சாமானிய மக்களும் மிக எளிதாக மொபைல் மற்றும் கணினி மூலமாக டிக்கெட் எடுக்கும் வகையில் இணையதளத்தின் வடிவமைப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மேம்படுத்தப்பட்ட சேவையின் மூலம், தட்கல் போன்ற உச்சக்கட்ட நெரிசல் நேரங்களில் கூட இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் வரை எவ்வித தடையுமின்றி மிக வேகமாக முன்பதிவு செய்ய முடியும். வழக்கமாகப் பயணிகள் சந்திக்கும் சர்வர் கோளாறுகள், பேமெண்ட் தோல்விகள் மற்றும் இணையதள முடக்கங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கிளவுட் கட்டமைப்பு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவை எளிதாக்கும் இந்த அதிவேக டிஜிட்டல் மாற்றம் ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





