ஈரான் போர் காரணம் இல்லையாம்! டிரம்ப் தோற்றதற்கு உண்மையான காரணம் இதுதான்! வெடித்த புதிய விவாதம்!

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக்கட்சி அடைந்த பின்னடைவைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசியலில் புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை மனதில் கொண்டு, தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (J.D. Vance), அதிபர் டொனால்ட் டிரம்பை விட்டு மெல்ல விலக முயற்சிப்பதாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John Bolton) குற்றம் சாட்டியுள்ளார்.

“வேன்ஸ் செய்வது ஆபத்தான அரசியல் விளையாட்டு”

பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய ஜான் போல்டன், இடைக்காலத் தேர்தல் தோல்விக்கு ஈரான் போரே காரணம் என ஜே.டி. வேன்ஸ் கூறியது முற்றிலும் தவறானது என்றும், அது ஒரு மிகப்பெரிய அரசியல் பிழை என்றும் குறிப்பிட்டுள்ளார். “2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட பிரச்சாரத்தையே வேன்ஸ் இப்போது தொடங்கியுள்ளார். ஆனால், டிரம்பிற்கு எதிராக அவர் எடுக்கும் இந்த அரசியல் முடிவு மிகவும் ஆபத்தானது. இது பின்னாளில் அவருக்கே பெரும் பின்னடைவாக மாறக்கூடும்” என போல்டன் எச்சரித்துள்ளார்.

மக்கள் கோபத்திற்கு உண்மையான காரணம் என்ன?

தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் மட்டுமே காரணம் அல்ல எனக் குறிப்பிட்ட போல்டன், டிரம்ப் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வு மற்றும் கூடுதல் வர வரிகள் (Tariffs) ஆகியவைதான் வாக்காளர்களின் அதிருப்திக்கு முக்கியக் காரணம் என்று விளக்கினார். 2024 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற டிரம்ப் தவறிவிட்டதாகவும், கச்சாய் எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலை உயர்வைக்கட்டுப்படுத்த அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா – அமெரிக்கா உறவில் ஏற்படுமா மாற்றம்?

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் சர்வதேச வெளியுறவுக் கொள்கைகள் புறக்கணிக்கப்படலாம் என்ற அச்சத்தையும் ஜான் போல்டன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா விடுக்கும் சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற முக்கிய விவகாரங்கள் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.