சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் (KMC) 61-வது பட்டமளிப்பு விழா தற்பொழுது மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய தவெக அரசின் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள், புதிய அரசு மருத்துவத் துறை மற்றும் அரசு மருத்துவர்களின் டிக்னிட்டியை (Dignity) பாதுகாப்பதில் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார். விழாவில் பேசிய அமைச்சர், “பல கல்லூரிகளுக்கு நான் சென்றிருந்தாலும், கேஎம்சி பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருப்பது என் வாழ்வில் மிகவும் நெகிழ்ச்சியான ஒரு தருணம்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், இந்த விழாவிற்குத் தான் வந்ததற்கான ஒரு முக்கிய தனிப்பட்ட ரகசியத்தையும், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் அவையில் உடைத்தார்:
-
முதலமைச்சர் விஜய் அண்ணனின் உத்தரவு: “என்னுடைய மனைவி இங்கு கேஎம்சி-யில் தான் உதவிப் பேராசிரியராகப் (Assistant Professor) பணியாற்றி வருகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக, தற்போதைய தமிழக முதலமைச்சர் நம்ம அண்ணன் விஜய், அண்ணா அவர்களை நாங்கள் சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது கல்லூரி முதல்வர் கவிதா அவர்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவியாக இருந்தாலும் (Stanley Spirit), கேஎம்சி-யின் உள்கட்டமைப்பை (Infrastructure) மேம்படுத்த வேண்டும் என்று அண்ணனிடம் உரிமையோடு கோரிக்கை வைத்தார். முதலமைச்சர் ஆனதும் கேஎம்சி-க்கு நல்ல திட்டங்களைச் செய்ய வேண்டும் என்று அண்ணன் விஜய் கொடுத்த உத்தரவின் பேரில் தான் நான் இன்று இங்கு வந்துள்ளேன்.“
-
பனகல் ஹால் புனரமைப்பு: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு எப்படி ‘ரெட் போர்ட்’ அனாடமி பிளாக் எமோஷனலாக அட்டாச் ஆக உள்ளதோ, அதேபோல கேஎம்சி மாணவர்களின் உணர்வோடு கலந்த ‘பனகல் ஹால்’ (Panagal Hall) என்ற பாரம்பரிய ஹெரிட்டேஜ் ஹால் கண்டிப்பாக முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு, பழைய முறைப்படி மீட்டெடுக்கப்படும் (Restore) என்று அமைச்சர் உறுதியளித்தார்.
-
புதிய கட்டடங்கள்: சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro Rail) திட்டப் பணிகளுக்காகக் கல்லூரியின் சில பில்டிங்குகள் இடிக்கப்பட்டது குறித்து முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்குப் பதிலாகத் தேவையான கூடுதல் புதிய கட்டடங்கள் கண்டிப்பாகக் கட்டித் தரப்படும் என்று கூறினார்.
அரசு மருத்துவர்களின் மாண்பு காக்கப்படும்! “நான் முதன்முதலில் ஒரு டாக்டராக இருந்து, பின்னர் யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்ச்சி பெற்று 15 ஆண்டுகள் ஐஆர்எஸ் (IRS) அதிகாரியாகப் பணியாற்றி, தற்பொழுது அரசியலில் இருந்தாலும், என்னுடைய நிரந்தர அடையாளம் ‘டாக்டர்’ என்பதுதான். என்பதால் ஒரு மருத்துவனாக இந்தத் துறையின் கஷ்டங்கள் எனக்கு நன்றாகத் தெரியும்” என்று குறிப்பிட்ட அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், சமீபத்தில் நடைபெற்ற சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டத்தில் ஜாயிண்ட் டைரக்டர்கள் மற்றும் டீன்களிடம் தான் பிறப்பித்த உத்தரவை மேடையில் தெளிவுபடுத்தினார்.
“கடந்த காலங்களைப் போல பொது இடங்களிலோ அல்லது ஊடகங்களின் முன்னிலையிலோ அரசு மருத்துவர்களைத் தேவையின்றி திட்டுவதோ, உடனடியாக சஸ்பெண்ட் (Suspend) செய்வதோ அல்லது மெமோ (Memo) கொடுப்பதோ இனி கண்டிப்பாக நடக்காது. மருத்துவர்கள் அனைவரும் மிகவும் டிக்னிஃபைடாக (Dignified) நடத்தப்படுவார்கள். நமக்கு ஒரு ஆபத்து அல்லது பிரச்சனை வரும்போது கண்கண்ட தெய்வமாக, கடவுளாக நேரில் வந்து காப்பது நம்முடைய டாக்டர்கள் தான். எனவே, அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது முதலமைச்சர் விஜய் அண்ணனின் நேரடி உத்தரவு” என்று அமைச்சர் பேசியது அங்கிருந்த ஒட்டுமொத்த மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பலத்த கைதட்டலையும், பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.





