ஆங்கரா இருந்த இதே நேரு ஸ்டேடியம்.. இப்போ அதே மேடையில அமைச்சரா! அமைச்சர் ராஜ்மோகன் உணர்ச்சிப்பூர்வ மாஸ் பேச்சு! “பெற்றோரை இழந்த குழந்தை, வன்முறையைத் தொடாம ஸ்போர்ட்ஸை தேர்ந்தெடுத்த வரலாறு!” ஆதவ் அர்ஜுனா முதல் ஒலிம்பிக் கனவு வரை உருகிய அமைச்சர்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக அமைச்சரும், பிரபல முன்னாள் தொகுப்பாளருமான ராஜ்மோகன், தனது அசுரத்தனமான வாழ்க்கைப் பயணம் மற்றும் தவெக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ஆரம்பகாலப் போராட்டங்கள் குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி அரங்கையே அதிர வைத்துள்ளார்.

விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, “இதே எக்மோர் தொகுதிக்கு உட்பட்ட நேரு ஸ்டேடியத்திற்குள் ஒரு காலத்தில் என்னை உள்ளே விடமாட்டார்கள், வாசலில் நின்று எத்தனையோ முறை கெஞ்சியிருக்கிறேன். அதன்பின்னர், இந்திய சினிமாவின் உச்சகட்ட விழாவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இதே மேடையில் நடந்தபோது, நான் ஒரு சாதாரண ஆங்கராக (Anchor), தொகுப்பாளராக வந்து நின்றேன். அதற்கடுத்து ஒரு காலம் வந்தது, ‘சி. ஜோசப் விஜய் என்னும் நான்…’ என்று மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் இதே மைதானத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தபோது, நான் அவரின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இதே மேடையில் வந்து கம்பீரமாக நின்றேன்.

இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் நமது விளையாட்டுத் துறை அமைச்சரும், இதே நேரு ஸ்டேடியத்தின் ஹாஸ்டல் ரூம் நம்பர் 56-இல் தங்கி, முற்றிலும் தனது சொந்த மெரிட் தகுதியால் மட்டுமே தமிழ்நாடு லெவலில் தேர்வாகி வளர்ந்த ஒரு உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன் ஆவார். எந்தவித பரிந்துரையும் (Recommendation) இல்லாமல் பேப்பர்களைத் தூக்கிப் போட்டுவிட்டு நேர்மையாக வந்தவர் அவர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “ஒரு இளைஞரை தடுத்தா 1 லட்சம் பேர் வருவோம்!” முதலமைச்சர் விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி நேரடி சவால்! தெம்பு இருந்தா கைது செய்யுங்க!: கைது அரசியல் செல்லாது! திமுக அமைப்புச் செயலாளர் ஆவேசம்! தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!

அதேபோல், தவெக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளரான என் அன்புச் சகோதரன் ஆதவ் அர்ஜுனாவின் வாழ்க்கையை நான் யோசித்துப் பார்க்கிறேன். சிறு வயதிலேயே தனது கண் முன்னால் தாயையும் தந்தையையும் தற்கொலை மூலம் இழந்து, அநாதையாக ஹாஸ்டலில் தங்கி, சக்கையான ஊட்டச்சத்தில்லாத உணவைச் சாப்பிட்டு வளர்ந்த குழந்தை அவர். அன்று அவரிடம் வன்முறையைக் கையில் எடுக்கும் முதல் ஆப்ஷன் இருந்தது; ஆனால், அவர் தேர்ந்தெடுத்தது இரண்டாவது ஆப்ஷனான விளையாட்டு (Sports). தனது மொத்த கோபத்தையும் கிரவுண்டில் காட்டி, மாநில மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்தார்.

விளையாட்டுத் துறைக்குள் இருக்கும் அரசியலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தனது பிரைம் பிளேயர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, பெடரேஷன் தேர்தலில் நின்று தலைவரானார். அன்று வெளிமாநிலப் போட்டிகளுக்கு ரயிலில் போக முடியாமல் கஷ்டப்பட்ட நம் செல்லக் குழந்தைகளை, இன்று ஆதவ் அர்ஜுனா என்ற மனிதன் தனது சொந்தச் செலவில் பிளைட் டிக்கெட் (Flight Ticket) போட்டுச் சிறகடிக்க வைத்துப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்.

இங்கு இருக்கும் பாரா ஒலிம்பிக் வீரர்களின் வாழ்க்கைதான் உலகத்தின் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். உங்களது முழு கவனத்தையும் விளையாட்டில் மட்டுமே வையுங்கள். உங்களைப் பார்த்துக் கொள்ள இந்த மேடையில் இருக்கும் நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். இந்தியாவிலேயே மிக அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாற வேண்டும். அந்தப் பாராட்டு விழாவிற்கும் இதே அரங்கத்தில் இந்தச் சகோதரன் ராஜ்மோகனை நீங்கள் கம்பீரமாக அழைக்க வேண்டும்” என்று அமைச்சர் ராஜ்மோகன் மிக உணர்ச்சிகரமாகப் பேசி உரையை நிறைவு செய்தார்.