“இது அருவருப்பானது, அரசியலமைப்பிற்கு எதிரானது!” விஜய்க்கு ஆதரவாகப் பிரகாஷ் ராஜ் ஆவேச ட்வீட்; ஆளுநருக்குக் கடும் கண்டனம்!

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் தாமதிப்பது குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன் இதைக் கண்டித்திருந்த நிலையில், தற்போது பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் ஆளுநரைச் சாடிப் பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்பிற்கு எதிரானது:

பிரகாஷ் ராஜ் தனது பதிவில், “ஆளுநரின் இந்த நடத்தை அருவருப்பானது (Disgusting), ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பதவியேற்க விடாமல் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என்பது அவரது கருத்தின் சாரமாக உள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "படித்த இடத்திலேயே வெற்றி வாகை!" பெரம்பூர் வெற்றிச் சான்றிதழை லயோலா கல்லூரியில் பெற்றார் விஜய்; "CM" முழக்கத்தால் அதிர்ந்த அரங்கம்!

சட்டமன்றத்தில் நிரூபிக்கட்டும்:

“நமக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்… ஆனால் விஜய் மக்கள் ஆணையைப் (Mandate) பெற்றுள்ளார். சட்டமன்றத்தின் தளத்தில் (Floor of the House) தனது உரிமையை நிலைநாட்டவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்” எனப் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

வலுக்கும் அரசியல் அழுத்தம்:

திருமாவளவன் ஏற்கனவே “அமித்ஷாவின் விளையாட்டு தமிழகத்தில் அரங்கேறுகிறது” எனக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், பிரகாஷ் ராஜின் இந்த ஆதரவு தவெக-விற்குக் கூடுதல் அரசியல் பலத்தைச் சேர்த்துள்ளது. ஆளுநர் மாளிகையின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைத் தமிழகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

Leave a Comment