“மாணவர் போராட்டத்திற்கும் படத்திற்கும் தொடர்பில்லை! ‘ஜனநாயகன்’ பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கூடும்!” – ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடி பேட்டி!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கனவே முறைப்படி வெளியிடப்பட்டு, அதன்படி குறிப்பிட்ட தேதியிலேயே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது மாநிலத்தில் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கும், இந்தப் படத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

இந்தப் படத்தை பார்ப்பதினால் மனித மூளைக்கு சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர, மாணவர்களின் மூளையையோ அல்லது வேறு யாருடைய மூளையையோ மூளைச் சலவை செய்யும் படம் இது அல்ல” என்று மிகத் தெளிவாகக் கூறினார்.

மாணவர் போராட்டங்களைத் தூண்டும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதாக எதிரத்தரப்பினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் இந்த விளக்கமான பேட்டி திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "அங்க போய் சண்டை போட்டவங்களும் இருக்காங்க!" எம்எல்ஏ-க்கள் பயிற்சியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடி பேச்சு... திமுக ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு!