Political News
“மூக்கை நுழைக்க வேண்டாம்!” சிபிஎஸ்இ 3 மொழி கொள்கை; ஆளுநர் அர்லேகருக்கு தாகூர் சாட்டை!
சிபிஎஸ்இ-யின் புதிய மூன்று மொழி கொள்கை நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலையிடுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி மேல்முறையீடு!
சாலை முறைகேடு வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸிற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி! விஜய் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிலடி!
"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நிமிடம் கோபம் வருகிறதோ, அந்த நிமிடமே தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நடிகர் விஜய்யின் பேச்சுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் மண்ணைக் கவ்வுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
“திமுக என்னை அப்படி வளர்க்கவில்லை… நான் ஓடவில்லை.. ஒளியவில்லை, பதுங்கவில்லை!” லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்!
ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் 2016 முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பரபரப்பு திருப்புமுனை! த.வெ.க அரசை கவிழ்க்க சதியா? செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி விசாரணை!
தமிழகத்தில் த.வெ.க அரசை கவிழ்க்க சதி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
“முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர்!” தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம்! கேபினட் அந்தஸ்து கொண்ட மெகா பதவி! வெளியானது அதிகாரப்பூர்வ அரசாணை! ஆளுநர் சந்திப்பின் போதே கசிந்த ரகசியம்!
"அமைச்சருக்கு நிகரான மெகா பதவி!" முதலமைச்சர் விஜய்யின் மிக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது.
பாஜக – திமுக ரகசிய உறவா? அமைச்சர் நிர்மல் குமாருக்கு தமிழிசை கொடுத்த மரண அடி! “முதல்ல அந்த மின்வெட்டை சரி பண்ணுங்க!” ஃபைல் காணாமல் போன விவகாரத்தையும், சிபிசிஐடி தாமதத்தையும் போட்டுடைத்த பாஜாக மூத்த தலைவர்!
"எங்களுக்கு எந்த ரகசியமும் கிடையாது!" தவெக அமைச்சர் நிர்மல் குமாரின் புகாரை முற்றிலும் மறுத்து, தமிழ்நாட்டின் மின்தடை மற்றும் ஃபைல் மாயமான விவகாரங்களை முன்வைத்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி தாக்குதல்.
“டெல்லிக்கு அடிமைசாசனமா?” – எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்த ஸ்டாலின்; புதுக்கோட்டை பரப்புரையில் அதிரடி!
"ஒரு அடிமையால் ஓனரை எதிர்த்துப் பேச முடியாது" - எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்த முதல்வர் ஸ்டாலின்.








