Trump Trashes Iran’s Defense In Fierce Speech!: “அவங்க விமானப்படை, கடற்படை எல்லாமே காலி!” மோடி, புதின், ஜி ஜின்பிங் பற்றி டிரம்ப் ஓப்பன் டாக்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் சர்வதேச ஊடகங்களுக்கு மத்தியில் அதிரடியான மற்றும் சுவாரசியமான உரை ஒன்றை ஆற்றியுள்ளார். இந்த ஒப்பந்தம் தாங்கள் திட்டமிட்ட 99 சதவீத இலக்குகளை, குறிப்பாக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்துள்ளதை முழுமையாக எட்டியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கடந்த இரண்டு நாட்களாக ஜி7 (G7) நாடுகள், உலக நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்களுடன் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் குறிப்பிட்ட டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைத் தான் நேரில் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்ததாகவும், இந்த ஒப்பந்தத்தை மோடி உள்ளிட்ட அனைத்து உலகத் தலைவர்களும் மனதாரப் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், போர் நிறுத்தத்திற்கு முந்தைய கடைசி இரண்டு நாட்களின் தீவிரத் தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது, “அமெரிக்கா சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான குண்டுகளை ஈரான் மீது வீசியது. மூன்றாவது நாளும் தாக்குதலுக்குத் தயாராக இருந்தோம். அதற்குள் ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானின் பழைய தீவிரவாதத் தலைவர்கள் அனைவரும் தற்பொழுது களத்தில் இல்லை; அங்கு உருவாகியுள்ள புதிய தலைவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் தீவிரவாதம் அற்றவர்கள். இது ஒருவகையில் மறைமுக ஆட்சி மாற்றம் (Regime Change) தான்” என்று விவரித்தார். அமைதிக்கான அறிகுறிகள் தெரிந்த உடனே உலகப் பங்குச்சந்தை ராக்கெட் போல எகிறியதாகவும், பொருளாதாரப் பேரழிவைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  வியாழக்கிழமை வருது மின்துறை வெள்ளை அறிக்கை! திமுக-ஆளுநர் ரகசிய டீலை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்!: "அங்க சுத்திக்கிட்டு இருந்த புரோக்கர்கள் இப்போ காலி!" தலைமைச் செயலகத்தில் சாமானிய மக்கள் அலைமோதுவது ஏன்? தவெக அமைச்சர் அதிரடி பேட்டி!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு சிறந்த கூட்டாளி என்று பாராட்டிய டிரம்ப், அதேசமயம் லெபனான் மற்றும் ஹெஸ்பொல்லா விவகாரத்தில் இஸ்ரேலின் அதிரடித் தாக்குதல்களைச் சற்று மென்மையாகக் கையாண்டிருக்கலாம் என்று விமர்சித்தார். “இரண்டு ட்ரோன்கள் பாலைவனத்தில் விழுந்ததற்காகப் பெய்ரூட் நகரின் பெரிய கட்டடங்களையெல்லாம் இடித்துத் தள்ள வேண்டிய அவசியமில்லை, லெபனான் மக்கள் பாவம்” என்று குறிப்பிட்டார். மேலும், முந்தைய ஒபாமா அரசு போல ஈரானுக்குப் பணப் பெட்டிகளை அனுப்பப் போவதில்லை என்றும், தகுதியின் அடிப்படையிலேயே அனைத்தும் நடக்கும் என்றும் சாடினார்.

இறுதியாக, உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்துப் பேசிய டிரம்ப், அதிபர் புதின் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரிடமும் பேசியதாகத் தெரிவித்தார். இப்போரில் தாக்குதல் நடத்தும் நிலையில் உள்ளதால் ரஷ்யா அதிக வீரர்களை இழந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா – ஈரான் மோதலின் போது முற்றிலும் நடுநிலை வகித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய இருவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறி உரையை நிறைவு செய்தார்.