தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் அடுத்த அதிரடி! சிங்கப்பூர் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்! ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிரடி குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் உத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி குதிரை பேரம் நடத்த முயன்ற விவகாரத்தில் தற்போது சர்வதேச அளவில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சமண பெருமாள் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் (Lookout Notice) பிறப்பித்து சென்னை போலீசார் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய சில மணி நேரங்களிலேயே, இந்த வழக்கில் வெளிநாட்டுத் தொடர்பை உடைத்து போலீசார் அடுத்தகட்ட பாய்ச்சலைத் தொடங்கியுள்ளனர். சபாநாயகர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதற்காகத் திட்டமிடப்பட்ட இந்த குற்றச்சதியில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாளுக்கு மிக முக்கியப் பங்கு இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

லட்சமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்துகொண்டே இந்த வழக்கின் மிக முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களை அழித்துள்ளதாகத் திருவல்லிக்கேணி போலீசார் நீதிமன்றத்தில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குதிரை பேரத்திற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் குறிப்பிட்ட தனியார் ஹோட்டலின் சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை அவர் முற்றிலும் அழித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த பேரம் பேசுதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முக்கிய நபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் (WhatsApp Chats) மற்றும் அழைப்பு விவரங்களையும் அவர் சிங்கப்பூரில் இருந்தபடியே தொழில்நுட்ப ரீதியாக எரேஸ் (Erase) செய்து ஆதாரங்களை மறைத்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சமண பெருமாள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுத்துக் கைது செய்யும் நோக்கில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தவெக மற்றும் திமுக அரசியல் வட்டாரத்தில் மேலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.