UPI: யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? மத்திய அரசின் புதிய திட்டம்… யாருக்கு பாதிப்பு? முழு விவரம்!

இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ (UPI) செயலிகளின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. சிறிய காய்கறிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

யாருக்கு இந்த கட்டணம் பொருந்தும்? பொதுமக்கள் மற்றும் சிறிய வியாபாரிகளுக்கு இந்தச் செய்தி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது கவனிக்கத்தக்கது. ஆண்டுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கட்டண விவரங்கள் மற்றும் வரம்புகள்:

  • கட்டண அளவு: பெரிய வணிக நிறுவனங்களின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளது.

  • வரம்பு: ரூ.2,000-க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இக்கட்டணம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

  • விலக்கு: சிறிய வியாபாரிகள், தெருவோரக் கடைக்காரர்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையே நடைபெறும் (P2P) பரிவர்த்தனைகளுக்கு எப்போதும் போல எந்தக் கட்டணமும் இருக்காது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மேற்கு ஆசியப் போர்... எகிறிய கட்டுமானச் செலவு! வீடு வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த 4 மாத அவகாசம்!

டிஜிட்டல் பரிவர்த்தனை உள்கட்டமைப்பைப் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், பெரிய வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இக்கட்டணத்தைச் வசூலிப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.