Over 13,000 Fever Cases in a Single Day! ஷிகெல்லா, நிபா வைரஸ் பரவலால் அதிரும் எல்லையோர மாவட்டங்கள்! தமிழக-கேரள எல்லையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பு! சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், மாநிலம் முழுவதும் பல்வேறு வகையான தொற்று காய்ச்சல்களின் பரவல் வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 13,539 பேருக்குக் கடுமையான காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம், வயநாடு மற்றும் கொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 2,734 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சாதாரண காய்ச்சலுடன் சேர்த்து எலிக்காய்ச்சல் (Leptospirosis), ராபிஸ் (Rabies) மற்றும் ஷிகெல்லா (Shigella), நிபா (Nipah) போன்ற ஆபத்தான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களும் தற்பொழுது வேகமாக அதிகரித்து வருகின்றன. சுகாதாரத்துறை அமைச்சர் முரளிதரன் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நடப்பு மாதத்தில் மட்டும் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எலிக்காய்ச்சல் மற்றும் ராபிஸ் தொற்று காரணமாக நேற்று 3 பேரும், ஷிகெல்லா வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 பேரும் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  No Security Or Collateral Required: ரூ.20 லட்சம் வரை முத்ரா கடன்! ஜாமீன் இல்லாமலே அள்ளலாம்! புதிய விதிகள் இதோ!

இந்த ஷிகெல்லா பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் முதன்மையாகக் மாசுபட்ட குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் மூலமாகவே பரவுகிறது. இதன் காரணமாக, மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து உணவகங்கள், விடுதிகள் மற்றும் தேநீர்க் கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்குத் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்துக் குடிக்குமாறும், கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலைச் சாதாரண ஒன்றாகக் கருதி சுய மருத்துவம் செய்துகொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் காய்ச்சல் வெடிப்பு, அதன் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, எல்லையைக் கடந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ளது.