எந்த மிரட்டலுக்கும் பணியமாட்டார் கே.என்.நேரு: அதிமுக மற்றும் தவெகவுக்கு கனிமொழி ஓபன் வார்னிங்!

திமுகவின் தூண்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மணமக்களை வாழ்த்தியதோடு, எதிர்க்கட்சிகளுக்கும் தனது உரையின் மூலம் தெளிவான அரசியல் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

திருமண விழாவில் உரையாற்றிய கனிமொழி, “கே.என்.நேருவும் திமுகவும் எப்படி பிரிக்க முடியாத அடையாளமாக இருக்கிறார்களோ, அதேபோல உங்களது தம்பதியர் வாழ்க்கையும் என்றும் உறுதியோடும் பரஸ்பர அன்போடும் இருக்க வேண்டும்” என்று மனதார வாழ்த்தினார். கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களின் தியாகத்தை இந்த ஒப்பீடு வெளிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்துக் கடுமையான எச்சரிக்கையை முன்வைத்தார். அதிமுகவாகட்டும் அல்லது தவெகவாகட்டும், ஒருவேளை திமுக அல்லாத வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் கே.என்.நேருவுக்கு அளிக்கப்படும் ‘ஸ்பெஷல் கவனிப்பு’ எப்பொழுதும் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் எத்தகைய மிரட்டல்களுக்கும் அஞ்சித் தலைவணங்குபவர் கே.என்.நேரு அல்ல என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என ஆவேசமாகத் தெரிவித்தார். கனிமொழியின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.