தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தற்பொழுது முதலமைச்சர் விஜய்யின் ஒவ்வொரு புதிய நிர்வாக நகர்வும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி வருகிறது. அந்த வகையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் விழிப்புணர்விற்காக (Say No To Drugs) பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய நிகழ்வு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்பொழுது தனது ‘கத்தா குஸ்தி 2’ திரைப்பட விளம்பர நேர்காணலில் கலந்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், இந்த அதிரடி மாரத்தான் இயக்கம் மற்றும் ரஜினிகாந்த்-விஜய் இடையே மூட்டப்படும் சமூக வலைதள சர்ச்சை குறித்து மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
முதலமைச்சரின் ஃபிட்னஸ்: விஷ்ணு விஷால் வியப்பு!
முதலமைச்சர் விஜய்யின் மாரத்தான் குறித்துத் தனது எதார்த்தமான பார்வையைப் பகிர்ந்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், “முதலமைச்சர் விஜய் சார் 50 வயதுக்கு மேல் ஆகியும், எவ்வித தொய்வும் இன்றி களத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் தூரம் ஓடியதை நேரில் பார்க்கும்போது மிகவும் பாசிட்டிவாக இருந்தது. ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்நலம் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே முன்மாதிரியாகக் காட்டியுள்ளார். காலையில் தவேகா மாநில பொதுச்செயலாளர் ஆதி அர்ஜுனா பேசும்போது ‘இதற்கு முன்னால் இப்படி ஒரு முதலமைச்சரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து சிஎம் எல்லாரோடும் சேர்ந்து ஓடியதைப் பார்க்கும்போது அது ரொம்பவே நன்றாக இருந்தது. ‘ஸ்டே நோ டு டிரக்ஸ்’ என்ற இந்த விழிப்புணர்வு செய்தி மக்கள் மத்தியில் ஒரு மிகச்சிறந்த பாசிட்டிவ் சிக்னலை கொடுத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சினிமா உலக மாற்றம்: ஒன்னு ஒன்னா நடக்கும்!
மேலும், தற்போதைய புதிய அரசு மற்றும் சினிமா துறை குறித்துப் பேசிய அவர், “மக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்துதான் தற்போதைய புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளோம். எனவே, உங்களைப் போலவே எனக்கும் இந்த அரசு மூலம் இன்னும் பல நல்ல பாசிட்டிவான மாற்றங்கள் நடக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. அதேபோல், தமிழ் சினிமா துறைக்கும் தற்பொழுது நிறைய கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுகின்றன, அவையும் தற்பொழுது முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் ஒவ்வொன்றாக நிச்சயம் நடக்கும் என்று நானும் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் விளக்கம்: வேதனை அளிக்கும் காலகட்டம்!
அதே சமயம், முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் மீது பொறாமைப்படுகிறார் என்று இணையத்தில் பரவி வரும் தேவையற்ற வதந்திகள் மற்றும் அதற்கு ரஜினிகாந்த் அளித்த விளக்கங்கள் குறித்து விஷ்ணு விஷால் தனது கடுமையான வேதனையைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சமூக வலைதளங்களில் எழும் தேவையற்ற விவாதங்களால், தற்பொழுது தலைவர் ரஜினிகாந்த் நேராக வந்து ‘எனக்கு விஜய்க்கு எதிராக எதுவும் இல்லை’ என்று மைக் பிடித்து விளக்கும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தனை சாதனைகளைச் செய்த ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரம், தான் யாருக்கும் பொறாமைப்படவில்லை என்று விளக்கம் கொடுக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
எதுக்கு அரசியல் ஆசை? ஓப்பனாக உடைத்த விஷ்ணு!
சமூக வலைதள ட்ரோல்கள் குறித்து மேலும் பேசிய விஷ்ணு விஷால், “சமீபத்தில் நடந்த ரஜினிகாந்தின் ‘தர்மன்’ (Dharman) திரைப்பட டைட்டில் லாஞ்சில் கூட, ‘நான் பேசினாலும் தப்பாகிறது, பேசாமல் மௌனமாக இருந்தாலும் வாயில் கொழுக்கட்டை வைத்துள்ளாரா என ட்ரோல் செய்கிறார்கள்’ என்று தலைவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆன்லைன் சண்டைகள் என்பது வேறு, நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் மத்தியில் இருக்கும் பரஸ்பர மரியாதை என்பது வேறு. எனக்குப் பெரிய அளவில் அரசியல் தெரியாது, புரியாது. இந்த லாஸ்ட் அஞ்சு வருஷத்துலதான் நான் அரசியலை கொஞ்சமாக ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கேன். நம்ம லைஃப்ல நம்ம பொழப்பு பார்கறதுக்கே டைம் கரெக்டா இருக்கு. நம்ம பிரச்சனைகளை ஹேண்டில் பண்றதுக்கே கரெக்டா இருக்கு. இதுல எதுக்கு அரசியல்ங்கற அந்த ஆசை எல்லாம் எனக்கு சுத்தமா கிடையாது” என்று மிகவும் எதார்த்தமாகத் தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.


![[ட்ரோல்களுக்கு மகேந்திரன் பதில்]: "சோலார் சிஸ்டம்னு சொன்னது என் தப்புதான்; மக்கள் மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிச்சிடுங்க!" உடைந்து போய் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட உருக்கமான வீடியோ! South Indian actor Master Mahendran appearing emotional and sincere during a close-up video address, explaining his recent interview statements regarding solar energy and regional politics.](https://hub.tamilnaduflashnews.com/wp-content/uploads/2026/06/actor-mahendran-clarification-video-troll-solar-system-explanation-300x169.jpg)


