கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கு மனு குறித்து, முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும், விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்ப்பது தொடர்பாகவும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, மு.க. ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.





