உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனுவை கிழித்தெறிந்த நீதிபதிகள்!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்கத் தடை கோரிய திமுகவின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் முதலமைச்சரை ஒரு குற்றவாளியாகச் சித்தரித்து நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற திமுக முயற்சிப்பதாக நீதிபதிகள் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் நிவாரண உதவிகள் வழங்குவதையும், ஊடகங்களில் இது குறித்து அவர் பேசுவதையும் தடுக்க வேண்டும் என திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவிகள் வழங்குவது எப்படி சாட்சியங்களைக் கலைப்பதாகும் என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினர். திமுக ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) முதலமைச்சர் விஜய்யின் பெயரே இல்லை என்பதை நீதிபதிகள் அப்போது சுட்டிக்காட்டினர்.

வழக்கில் சம்பந்தமே இல்லாத நிலையில் முதலமைச்சர் விஜய்யை அக்யூஸ்ட் என திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதாடியதற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆவணங்களை முழுமையாகப் படிக்காமல் திமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுகிறாரா என்று நீதிபதிகள் வெளிப்படையாகவே அதிருப்தி வெளியிட்டனர். முதலமைச்சர் என்ன பேச வேண்டும், அவர் எங்கு செல்ல வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என திமுக எதிர்பார்க்கிறதா என்றும் அவர்கள் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "60 எம்.எல்.ஏ-க்களுக்கு சீட்டு கொடுக்கலையே.. திமுகவை கேட்க துணிவிருக்கா?" மேடையில் சீறிய திருமாவளவன்!

ஒரு முதலமைச்சர் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் எப்படி ஆணை பிறப்பிக்க முடியும் என்றும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படைப் பேச்சுரிமைக்குத் தடை விதிக்கக் கோருகிறீர்களா என்றும் நீதிபதிகள் திமுக தரப்பை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். உச்சநீதிமன்றத்தை ஒரு அரசியல் மேடையாக ஆக்கக் கூடாது என்று மிகக் கடுமையான எச்சரிக்கையையும் அவர்கள் விடுத்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசுவதற்கோ, நேரில் சென்று நிவாரணம் வழங்குவதற்கோ எவ்வித தடையும் விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. மேலும், முதலமைச்சர் கரூர் செல்லத் தடை கோரிய இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கவே முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தொடர் கண்டனங்களை அடுத்து, வேறு வழியின்றி திமுக வழக்கறிஞர் தனது மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.