எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இ-கேஒய்சி கால அவகாசம் நீட்டிப்பு… கடைசி தேதி எப்போது?

வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கேஸ் சிலிண்டர் இணைப்பில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தகுதியான பயனாளிகளுக்கு மானியம் தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் வாடிக்கையாளர்கள் e-KYC சரிபார்ப்பைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த e-KYC சரிபார்ப்புப் பணிகளை முடிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 17) நிறைவடைய இருந்தது. எனினும், எரிவாயு விநியோக முகவர் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதாலும், இன்னும் பெருவாரியான வாடிக்கையாளர்கள் இந்தச் சரிபார்ப்பை நிறைவு செய்யாததாலும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, e-KYC சரிபார்ப்பு செய்வதற்கான கடைசித் தேதியை வரும் 23-ஆம் தேதி வரை நீட்டித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை இ-கேஒய்சி செய்யாத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தித் தங்களது சம்பந்தப்பட்ட எரிவாயு விநியோக முகவர் மையங்கள் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ செயலி மூலமாகவோ சரிபார்ப்பை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "காவல்துறைக்கே தேர்வு இருக்கு.. டாக்டருக்குக்கூடாதா?" – நீட் தேர்வுக்கு ஆதரவாக சரத்குமார் பகிரங்க பேச்சு!