Tamil Nadu News.
“நீட் பத்தி யாருமே பேசல!” – மைக் பறிப்பு.. போராட்டத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி.. தவெக அரசுக்கு எதிரான சதியா?
சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை சனம் ஷெட்டியிடம் மைக் பறிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி பேசாமல் தவெக அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
“எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்?” – தொடரும் காவல் மரணங்கள்.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் காரசார கேள்வி!
எதிர்க்கட்சியாக இருந்தபோது கேள்வி கேட்ட விஜய், முதல்வரானதும் மன்னிப்புக் கேட்கக் கூடத் துணிவின்றி ஒளிந்து கொண்டிருப்பதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
“20 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த அவமானம்!” திமுகவிலிருந்து விலகினார் மீனா ஜெயக்குமார்! பெண்ணின் கண்ணியத்தை சிதைப்பதாகக் கண்ணீர் அறிக்கை!
திமுக மாநில கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், தன் மீதான அவதூறுகளுக்குக் கண்டனம் தெரிவித்து கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
“சாகும் வரை ஜெயில் தான்!” நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோக்களை எடுத்து பல லட்சம் ரூபாய் பறித்த நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ள முழு விபரம்.
அரசு மருத்துவமனை குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்! டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு!
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அறிவிப்புப்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) டெண்டர் வெளியிட்டுள்ளது.
“திமுக என்னை அப்படி வளர்க்கவில்லை… நான் ஓடவில்லை.. ஒளியவில்லை, பதுங்கவில்லை!” லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்!
ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் 2016 முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சற்றே குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்றே சரிவைக் கண்டுள்ளது. தங்கம் கிராமுக்கு 50 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 5000 ரூபாயும் குறைந்துள்ள விபரம் உள்ளே.
“போலீஸ் எச்சரிக்கவே இல்லை!” – முதல்வர் விஜய் பேச்சுக்கு ஆதாரத்துடன் மறுப்பு சொல்லும் காவல்துறை!
கரூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக போலீஸ் தங்களை எச்சரிக்கவில்லை என முதல்வர் ஜோசப் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தெய்வாசீர்வாதம் அளித்த விளக்கம் இதற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
டாஸ்மாக்கில் இனி ₹10 கூடுதல் கிடையாது! ஊழியர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் விக்னேஷ்!
டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தவெக அரசு 25% சம்பள உயர்வை வழங்கியுள்ளது என மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.









