அரியலூரில் பரபரப்பு! “தாங்க முடியலையே” என ஆவேசப்பட்ட திருமாவளவன்; தொண்டர்கள் வெளியிட்ட மீம்ஸ்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அதீத உற்சாகத்தால் ஏற்பட்ட நெரிசல், ஒரு கட்டத்தில் களேபரமாக மாறியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட ஆத்திரத்தில், திருமாவளவன் மீண்டும் ஒருமுறை தொண்டரை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சார வாகனத்தைச் சூழ்ந்துகொண்ட தொண்டர்கள், அவரிடம் செல்ஃபி எடுக்கவும், சால்வை அணிவிக்கவும் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கிய திருமாவளவன், ஒரு தொண்டரை நோக்கித் தனது கையை ஓங்கி அறைந்தது, அங்கிருந்தவர்களின் மொபைல் கேமராக்களில் பதிவாகி வைரலாகி வருகிறது.

தொடர் பிரச்சாரப் பயணங்களால் நிலவும் உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் இவ்வாறு நடந்துகொண்டதாகக் கட்சித் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறிய நிலையில், மீண்டும் ஒரு ‘அறை’ சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசியல் விமர்சகர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், திருமாவளவனின் இந்த ‘அறை’ சம்பவத்தை  வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்கத் தொடங்கியுள்ளன.

இந்தக் களேபரங்களுக்கு இடையிலும் அவர் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார். “எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை விட, தொண்டர்களின் அதீத அன்பு சில நேரங்களில் இம்சையாக மாறிவிடுகிறது” என்று விசிக நிர்வாகிகள் இதற்குக் விளக்கம் அளித்து வருகின்றனர். தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், திருமாவளவனின் இந்த ஆவேசப் பேச்சு மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "உன்னை தொட எவனுக்கும் தைரியம் இல்லை!" - ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை; வைரல் பின்னணி!

Leave a Comment