75 வருஷ திமுக கோட்டையை அசைத்துப் பார்த்த தவெக! “இப்ப ஏன் கல்யாண வீட்டுல ஒப்பாரி வைக்கிறீங்க?” மேடையில் வெளுத்து வாங்கிய தவெக தம்பி!

“அது என்னடா கல்யாண வீட்ட வந்து ஒப்பாரி வைக்கறிங்க ? புதுசா இருக்கு!” என்று தேர்தல் களத்தில் தவெக பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, திமுகவின் அழுகையை உள்ளூர் ஸ்லாங்கில் வச்சு செய்துள்ளார் தவெக விர்ச்சுவல் வாரியர் ஒருவர். 75 வருஷ ஆலமரம், எங்களால ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைச்ச பிம்பத்தை, தலைவர் விஜய் மக்கள் சக்தி எனும் கத்தியை எடுத்து ‘சரக் சரக்’னு குத்தி இன்னைக்கு நிற்குதியாக நிக்க வச்சிருக்கார். மீடியாக்களை வச்சுக்கிட்டு ‘தாவேக்க நிர்வாகி கைது’ அப்படின்னு டிராமா போட்டவங்க, இன்னைக்கு ஒண்ணுமே செய்ய முடியாம அழுதுகிட்டு இருக்காங்க. “அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, 2026-ல் எங்கள் அண்ணாவால் முடித்து வைக்கப்பட்டது என்று வரலாறு சொல்லும்” என்று முழக்கமிட்டார்.

அதிமுகவின் அழிவுக்கு எடப்பாடியின் தவறான முடிவுகளே காரணம் என்று சாடிய அவர், ஜெயலலிதா அம்மையார் காலத்தில் ‘தலைவா’ படப் பிரச்சினையின் போது விஜய் கை கட்டி வீடியோ போட்டதை ட்ரோல் செய்தவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். “என் தலைவன் ப்ரொடியூசர், டைரக்டர், ரசிகர்களுக்காகத்தான் மண்டியிட்டான்; ஆனா இன்னைக்கு 41 பேர் உயிர் போனதுக்குக் காரணமான உங்களை சிபிஐ தேடி வரும், பொறுத்திரு ராஜா!” என்று எச்சரித்தார்.

மேலும் நாம் தமிழர் கட்சி குறித்துப் பேசுகையில், “பக்கத்துல க்யூஆர் கோடு இருக்கு, பணம் போட்டுவிடு” என்று சீமான் தம்பிகளிடம் திருநிதி திரட்டி, தன் மகனை அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் படிக்க வைக்கிறார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வெறும் 828 நாளில் 35% வாக்குகளைப் பெற்று, 108 சீட்டுகளுடன் அரியணை ஏறியுள்ள தலைவர் விஜய், தமிழகத்தில் லஞ்சமில்லாத ஒரு நேர்மையான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று தவெக விர்ச்சுவல் வாரியர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளனர்.