ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்திய மாலுமி பலி! 20% வரியுடன் டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஓமன் கடல் எல்லையை ஒட்டிய ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சென்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாகியா’ (Al Bahiyah) ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை நடத்திய கொடூரமான ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இத்தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய 6 இந்தியர்கள் மற்றும் 2 உக்ரைனியர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஈரானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளதுடன், இது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்றும் சாடியுள்ளது.

ஈரானின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையின் முழு பாதுகாப்பையும் இனி அமெரிக்காவே ஏற்கும் என்றும், அதன் “பாதுகாவலனாக” அமெரிக்கா செயல்படும் என்றும் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். இதற்காக, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் ஈரானிய கப்பல்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும், மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் உடனடி அமலாக 20% பாதுகாப்பு வரி (Tariff) விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  World War 3 Alert! Iran Closes Strait of Hormuz! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ரத்து! இஸ்ரேல் - லெபனான் போரால் வெடித்த உச்சகட்ட மோதல்! கப்பல்கள் மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு!

வியட்நாம் போரை அமெரிக்கா 19 ஆண்டுகள் நீட்டித்ததை ஒப்பிட்டுப் பேசிய டிரம்ப், ஈரான் உடனான போர் தொடங்கி இன்னும் 4 மாதங்களே ஆகியுள்ள நிலையில், ஈரான் மீது மீண்டும் மிகக் கடுமையான கடற்படை முற்றுகையை (Naval Blockade) அமெரிக்கா தீவிரப்படுத்த உள்ளதாக எச்சரித்துள்ளார். இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.