உக்ரைன் போரை முடிக்க தயார்! புதின், ஜெலன்ஸ்கி பற்றி டிரம்ப் கூறிய பரபரப்பு தகவல்!

நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு, உலக நாடுகளிடையே பல்வேறு இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அண்மையில் நடைபெற்ற உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் அமைந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினுடன் உரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதே தனது முதன்மையான விருப்பம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அமைதிச் செயன்முறையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் முன்வந்து இணைந்தால், அது போரை விரைவாக முடிப்பற்குக் கூடுதல் சாதகமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளையில், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவாக நடைபெறாமல் தாமதமாவதற்கு இரு நாட்டுத் தலைவர்களிடையேயான தனிப்பட்ட கசப்புணர்வுகளே முக்கியக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிபர் புதின் மற்றும் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பரஸ்பர வெறுப்புணர்வே சமரசப் பேச்சுவார்த்தைகள் தங்குதடையின்றி முன்நகர்வதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "ஈரானிடம் ஒரு பைசா கூட இல்லை!" - கொந்தளிக்கும் டிரம்ப்: தூண்டப்படுகிறதா அடுத்த உலகப்போர்?