முற்றிலும் பொய்.. அன்ஃபாலோ செய்யல! முதல்வர் விஜய்யின் பிறந்தநாளுக்குத் திரிஷா நள்ளிரவில் போட்ட மாஸ் இன்ஸ்டா போஸ்ட்! 5 கேக்குகளுடன் ஜோடியாகக் கொண்டாட்டம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை திரிஷா!

தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சா. ஜோசப் விஜய் தனது 52-வது பிறந்தநாளை ஜூன் 22, திங்கட்கிழமை அன்று கொண்டாடினார். அவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை உலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் கடந்த சில மணிநேரங்களாக நடிகை திரிஷா மற்றும் விஜய் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பலத்த வதந்திகள் பரவின. திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்துவிட்டார் என்றும், இதனால் தான் இந்த முறை பிறந்தநாள் வாழ்த்துப் பகிரவில்லை என்றும் நெட்டிசன்கள் பலவாறாக விவாதித்து வந்தனர்.

இந்நிலையில், பரவி வந்த ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை திரிஷா இன்று (ஜூன் 23) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் இருக்கும் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட கேக்குகளுக்கு நடுவே விஜய்யும் திரிஷாவும் மிகவும் மகிழ்ச்சியாகத் தங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

மேலும் அந்தப் பதிவிற்குப் பின்னுட்டமாக (Caption), “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் அந்தச் சிறந்த மனிதருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் (To the person who makes it all worth it, HBD)” என்று திரிஷா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், திரிஷா விஜய்யை அன்ஃபாலோ செய்தார் என்ற செய்திகள் முற்றிலும் வதந்தி என்பதும், அவர் ஆரம்பத்திலிருந்தே விஜய்யின் கணக்கைப் பின்தொடரவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. திரிஷாவின் இந்த நள்ளிரவு அதிரடிப் பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.