மண்டை ஓட்டைத் திறக்காமல் 10 நிமிடத்தில் மூளையில் சிப்: நியூராலிங்கிற்குப் போட்டியாகச் சீன மருத்துவர்களின் புதிய சாதனை!

எலான் மாஸ்க் தனது ‘நியூராலிங்க்’ நிறுவனம் மூலம் மனித மூளையில் சிப் பொறுத்தி, அதை கணினியுடன் இணைக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், நியூராலிங்க் முறையில் ஒருவரின் மண்டை ஓட்டை ஆபத்தான முறையில் அறுவை சிகிச்சை செய்து திறந்து, மூளையின் திசுக்களுக்குள் நேரடியாக இந்த சிப்பை தைக்க வேண்டும். இது மிகப்பெரிய ஆபத்துகள் நிறைந்த ஒரு செயல்முறை. இதற்குப் போட்டியாக, சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மண்டை ஓட்டை எந்த வகையிலும் திறக்காமல், கழுத்தில் இருக்கும் ரத்த நாளம் வழியாக மூளைக்கு ஒரு சிறிய சிப்பை அனுப்பி, வெறும் 10 நிமிடங்களில் பொறுத்தும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பம் முழுமையாக வெற்றி பெறும்போது, பல ஆண்டுகளாகப் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை முற்றிலும் மாறப் போகிறது. குறிப்பாக, பக்கவாதத்தால் (Stroke) பாதிக்கப்பட்டு உடலின் ஒரு பகுதி அல்லது முழு உடலும் செயலிழந்தவர்கள், தண்டுவடப் பாதிப்பால் (Spinal Cord Injury) எழுந்து நடமாட முடியாதவர்கள், மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பான ஏஎல்எஸ் (ALS / Motor Neuron Disease) நோயால் பேசவோ அசைக்கவோ முடியாமல் தவிப்பவர்கள் இதனால் மிகப்பெரிய பயனடைவார்கள். பல குடும்பங்களில் தங்களது அன்பிற்குரியவர்கள் நோயினால் முடங்கிக் கிடக்கும்போது, அவர்களைக் பராமரிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இத்தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், நோயாளிகள் தங்களது மூளைச் சமிகஞைகள் மூலமாகவே மொபைல் போனை இயக்குவது, கணினியில் தட்டச்சு செய்வது, ரோபோடிக் செயற்கைக் கைகோள்களை இயக்கித் தாங்களாகவே நீர் அருந்துவது, உணவு உண்பது மற்றும் கழிப்பறைக்குச் செல்வது போன்ற அன்றாட வேலைகளைச் பிறர் உதவியின்றிச் செய்து கொள்ள முடியும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "நிஜமான எந்திரன் சிட்டி!" - மாணவியைக் காதலோடு அணைத்த சீன ரோபோ; ரஜினியின் 'எந்திரன்' பட பாணியில் ஒரு நிஜ அதிரடி!

மருத்துவ உலகத்தைப் பொறுத்தவரை, இது வெறும் ஒரு கருவிக் கண்டுபிடிப்பு அல்ல; மாறாகப் பேச முடியாதவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் குரல், முடங்கிக் கிடப்பவர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம்! இதயத்தில் அடைப்பு ஏற்படும்போது ‘ஸ்டென்ட்’ வைப்பது போன்ற எளிய முறையில், எந்த பெரிய ஆபத்தான அறுவை சிகிச்சையும் இல்லாமல் இதைச் செய்து முடிக்க முடியும் என்பதால், சாதாரண மக்களும் மிக எளிதாக இந்தச் சிகிச்சையைப் பெற முடியும். நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது ஒரு புதிய விடியலையும் நம்பிக்கையையும் தந்துள்ளது.